காந்திவலியில் பயன்படுத்தப்படாமல் கிடந்த கட்டடம் ஒன்றில் கடந்த வாரம் நான்கு பேர் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தனர். அவர்களில் இரண்டு பேர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்திருந்தனர். அவர்களின் உடல்களை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இறந்து கிடந்தவர்கள் பூமி தல்வி(17), சிவ்தயால் சென்(60), கிரண், முஸ்கான் என்று தெரியவந்தது. இதில் சிவ்தயால் அந்த வீட்டோடு தங்கியிருந்து டிரைவர் வேலை செய்துவந்தார். கிரணுக்கு முஸ்கான் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகள் ஆவார்.தற்கொலை - மரணம்
பூமி தல்வி இரண்டாவது கணவருக்குப் பிறந்தவராவார். கிரணின் கணவர் ஆசிஷ் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தன் மகனுடன் இந்தூரில் வசிக்கிறார். தற்கொலைக்கு முன்பு சிவ்தயால், பூமி தல்வி ஆகியோர் தனித்தனியாகக் கடிதம் எழுதி வைத்திருந்தனர். அதில்,``கிரணுக்கு வேறு ஒருவருடன் இரண்டு ஆண்டுகளாகத் திருமணம் மீறிய உறவு இருந்தது. இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. அதோடு பூமி தல்வியை கிரண் அந்த நபரிடம் ரூபாய் 2 லட்சத்திற்கு விற்பனை செய்திருந்தார்.சிவ்தயால்
இது குறித்து விசாரித்தபோது முஸ்கானுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதோடு என்னை இருவரும் மிரட்டினர். எனவே அவர்கள் இரண்டு பேரையும் கொலைசெய்ய முடிவு செய்தேன்" என்று சிவ்தயால் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பூமி எழுதியுள்ள கடிதத்தில் ஒரு பக்கத்தில் தன் தந்தைக்கும், மற்ற பக்கத்தில் போலீஸாருக்கும் எழுதியிருந்தார். தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில், ``அப்பா உங்கள் பொறுப்புக்களிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டேன். நானும் சிவா அங்கிளும் போகிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார். போலீஸாருக்கு எழுதிய கடிதத்தில், தன் தாயாரின் திருமணம் மீறிய உறவுகுறித்தும், அந்த நபர் தங்களையும், தங்கள் தந்தையையும் கொலைசெய்துவிடுவதாக மிரட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதோடு இந்தச் சம்பவத்தில் தங்கள் தந்தைக்கு எந்தவித தொடர்பும் கிடையாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.கொலை
சிவ்தயாலும், பூமியும் சேர்ந்து கிரண், முஸ்கான் இருவரையும் கொலைசெய்தனர். பின்னர் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலைக்கு முன்பு பூமிக்கு சிவ்தயால் காலி கட்டி மனைவியாக்கிக்கொண்டார். தற்கொலை செய்யும் பெண்கள் திருமணம் செய்யாமல் இருந்தால் அவர்கள் ஆத்மா சாந்தியடையாது என்பதால் இக்காரியத்தைச் செய்ததாகவும், தங்கள் இருவரின் உடல்களையும் ஒன்றாக எரித்துவிடும்படியும் கடிதத்தில் சிவ்தயால் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆசீர்வாதம் வாங்குவது போல வந்த மர்ம நபர்கள்; பிரபல வாஸ்து நிபுணர் பட்டப்பகலில் குத்திக் கொலை!
http://dlvr.it/STVNnS
Thursday 7 July 2022
Home »
» திருமணம் மீறிய உறவு; மகளை விற்ற தாய்... மும்பையில் ஒரே வீட்டில் இரு கொலை, இரு தற்கொலை!