மும்பையில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. மும்பை மட்டுமல்லாது மகாராஷ்டிரா முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் சில பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பைக்கு தற்போது வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்திருக்கிறது. அடுத்த 5 நாள்களுக்கு மிதனாமது முதல் கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியிருக்கிறது. இதனால் மகாராஷ்டிரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், கர்நாடகாவில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சூரத்தில் கனமழை
மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் பெய்த கனமழையால் 128 கிராமங்களில் தகவல் தொடர்பு அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது தவிர ஹின்கோலி, நாண்டெட் மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. இம்மாவட்டங்களில் வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட 3 கிராமங்களில் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் மீட்புப்பணிகளை மேற்கொள்ள மும்பை உட்பட முக்கிய இடங்களில் பேரிடர் மேலாண்மை படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.தெலங்கானா
தெலங்கானாவில் ரெட் அலர்ட் வெளியிடப்பட்டுள்ளது. நிஜாமாபாத், ராஜன்னா உட்பட சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று முதல்வர் சந்திரசேகர் ராவ் கேட்டுக்கொண்டுள்ளார். இது தவிர உத்தரப்பிரதேசம், குஜராத், ஹிமாச்சலப் பிரதேசத்திலும் கனமழை பெய்து வருகிறது. அமர்நாத்தில் புனிதப்பயணம் மேற்கொண்டு நடுவழியில் சிக்கிக்கொண்ட 15 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை மீட்க 8 விமானப்படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. மும்பையில் தொடரும் கனமழை... மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு!
http://dlvr.it/STfKtd
Sunday 10 July 2022
Home »
» மகாராஷ்டிரா, தெலங்கானாவில் கனமழை... 130 கிராமங்கள் பாதிப்பு: மும்பைக்கு ஆரஞ்ச் அலர்ட்!