பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து அசாமில் சிவன் வேடம் அணிந்து தெரு நாடகத்தை நடத்திய இளைஞரை அசாம் போலீஸார் கைது செய்தனர்.
அசாம் மாநிலம் நஹோன் மாவட்டத்தில் உள்ள காலேஜ் செளக் பகுதியில் நேற்று காலை சிவன் - பார்வதி வேடம் அணிந்தபடி இளைஞரும், இளம்பெண்ணும் தெரு நாடகத்தை நடத்தினர். அதில், மோட்டார் சைக்கிளில் அவர்கள் வருவது போலவும், பின்னர் பெட்ரோல் தீர்ந்து பாதி வழியிலேயே அவர்கள் நிற்பது போலவும் அவர்கள் நாடகக் காட்சிகளை அமைத்தனர். அப்போது பெட்ரோல் விலை உயர்வையும், மத்திய அரசையும் கண்டித்து அவர்கள் பேசுவது போல நாடகம் விரிவடையும்.
இதுதொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைப் பார்த்த இந்து அமைப்புகள், சிவன் - பார்வதியை நாடகம் நடத்தியவர்கள் அவமதித்து விட்டதாக கூறி போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனர்.
இதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிவன் வேடம் அணிந்து நாடகம் நடத்திய பிரிஞ்சி போரா (30) என்பவரை கைது செய்தனர்.
http://dlvr.it/STfy8b
Sunday 10 July 2022
Home »
» பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சிவன் வேடம் அணிந்து நாடகம் - அவமதிப்பு புகாரில் இளைஞர் கைது