மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா-மும்பை நெடுஞ்சாலையில் இன்று இந்தூரிலிருந்து காலை 7:30 மணிக்கு புறப்பட்ட பஸ் புனே நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்ஸில் 30 பயணிகள்வரை இருந்தனர். கால்கட் என்ற இடத்தில் நர்மதா ஆற்றின்மீது பஸ் சென்றபோது, பாலத்தின் தடுப்பை உடைத்துக்கொண்டு ஆற்றில் விழுந்தது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து செயல்பட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆற்றிலிருந்து பஸ் மீட்கப்பட்டது. பஸ் மீட்கப்படுகிறது
தார் மாவட்ட ஆட்சித் தலைவர் மேற்பார்வையில் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இந்த மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் பஸ்ஸில் பயணம்செய்த 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர். உயிருடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
இது குறித்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், ``விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. விபத்துப் பகுதியில் மாவட்ட நிர்வாகம் முகாமிட்டிருக்கிறது. இன்னும் சிலரைக் காணவில்லை. அவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்" என்று தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி அனுபாதம் தெரிவித்திருக்கிறார். நரேந்திர மோடி
விபத்துக்குள்ளான பஸ் மகாராஷ்டிரா அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமானதாகும். எனவே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார். விபத்துக்குள்ளான பஸ் 10 ஆண்டுகளைக் கடந்தது என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
நாக்பூரில் பதிவுசெய்யப்பட்ட இந்த பஸ்ஸின் தகுதிச் சான்று வரும் 27-ம் தேதிதான் முடிவடைகிறது. மகாராஷ்டிராவிலிருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் மிகவும் பழையதாக இருப்பதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம்: நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் உயிரிழப்பு!
http://dlvr.it/SV4ktY
Monday 18 July 2022
Home »
» நர்மதா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து; 13 பலி... மபி-யில் சோகம்!