தமிழகத்தின் மேற்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடந்த அரை நூற்றாண்டுக்காலமாக இருந்துவந்த கோரிக்கையான `அத்திக்கடவு - அவிநாசி’ திட்டம் தற்போது நிறைவேறியிருக்கிறது. காமராஜர் ஆட்சியின்போது தொடங்கிய இந்தத் திட்டத்தின் விதை, தற்போது முதல்வர் ஸ்டாலினின் கையால் தொடங்கப்பட்டிருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றும் பவானி ஆறு கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலுள்ள பில்லூர் அணைக்குப் பக்கத்திலிருக்கும் அத்திக்கடவுக்குள் நுழைகிறது. இந்த ஆறு ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணையை அடைந்து, பின்னர் 75 கிலோமீட்டர் பயணித்து பவானியருகில் காவிரியில் கலக்கிறது.அத்திக்கடவு - அவிநாசி திட்டம்
காவிரியில் கலக்கும் பவானி ஆற்றின் உபரிநீரை, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட விவசாயத்துக்குப் பயன்படுத்த வேண்டுமென 1957-ல் அன்றைய முதல்வரான காமராஜரிடம் விவசாயிகள் கோரிக்கைவைத்தனர். பவானி ஆற்றின் உபரிநீரை, திறந்த கால்வாய்கள் மூலம் திசைதிருப்பி, அன்றைய கோவை மாவட்டத்திலுள்ள வறண்ட நீர்நிலைகளில் நிரப்ப வேண்டும் என்பது கோரிக்கையின் மையக் கருத்தாக இருந்தது. இந்தக் கோரிக்கை முதல்வர் காமராஜரால் ஏற்கப்பட்டு, `மேல் பவானி திட்டம்’ என்று முதன்முதலில் பெயரிடப்பட்டது.அத்திக்கடவு-அவிநாசி திட்டம்
இதன் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு இடையே எதிர்ப்பு, ஆதரவு, ஆட்சி மாற்றம் போன்றவற்றால் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவது தள்ளிப்போய்கொண்டே வந்தது. 1957-ல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டாலும், பெரிதாக முன்னெடுப்புகள் ஏதும் இல்லாமலே இருந்தது. 1972-ல் திட்டத்தைச் செயல்படுத்த அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியால் கொள்கை முடிவெடுக்கப்பட்டதுடன், இந்தத் திட்டத்துக்கு `அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் மறுசேர்ப்பு மற்றும் குடிநீர் வழங்கல் திட்டம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.போராட்டம் அறிவித்த அண்ணாமலை; விளக்கமளித்த முத்துசாமி.. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் நிலை என்ன?
1996-ல் தி.மு.க ஆட்சியில் திட்டம் தொடர்பான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2009-ல் திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வுசெய்ய நீரியல் வல்லுநர் மோகனகிருஷ்ணன் தலைமையில் ஒரு தொழில்நுட்ப நிபுணர்குழு அமைக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கின்போது 2 டி.எம்.சி அடி நீரை திசைதிருப்ப முடியும் என்று அந்த அறிக்கை தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக பொறுப்பேற்ற, ஜெயலலிதா 2014-ல் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், ஒதுக்காவிட்டாலும் இந்தத் திட்டம் நிறைவேறும் என்று அறிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, ஏற்கெனவே இருந்த பழைய திட்டத்தை முற்றிலுமாக மாற்றி, பவானி ஆற்றின் கீழுள்ள காளிங்கராயன் அணைக்கட்டிலிருந்து ஆண்டுதோறும் 1.5 டி.எம்.சி தண்ணீரை எடுத்து அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்தார். அத்துடன், ரூ.1,490 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. விரிவான ஆய்வுப் பணிக்குப் பிறகு 2019-ல் அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
34 மாதங்களில் திட்டத்தை நிறைவுசெய்யத் திட்டமிடப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் இந்தத் திட்டத்தின் 80 சதவிகிதப் பணிகள் முடிக்கப்பட்டிருந்தன. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் மூலம் மூன்று மாவட்டங்களிலுள்ள 32 பொதுப்பணித்துறை குளங்கள், 42 உழவர் குளங்கள், 971 குளங்கள் ஆகியவற்றை நிரப்ப முடியும். தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இந்தத் திட்டத்துக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதுடன், நிலம் கையகப்படுத்துவதில் இருந்த பிரச்னைகளும் பேசி முடிக்கப்பட்டன. 2022-ல் முதல்வர் ஸ்டாலின், திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டார். 2023 ஜனவரியில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. தற்போது 1,916 கோடி ரூபாயில் மதிப்பில் இந்தத் திட்டம் நிறைவு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.நீரேற்று நிலையம்
திட்டத்தின் செயல்பாடு:
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டுவதற்காக பவானி ஆற்றில் காளிங்கராயன் அணையின் கீழ்புறத்திலிருந்து ஆண்டுக்கு 1.5 டி.எம்.சி நீரை விநாடிக்கு 250 கன அடி வீதம் 70 நாள்களுக்கு நீரேற்று முறை மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு, 1,065 கி.மீட்டர் நீளத்துக்கு நிலத்தடியில் குழாய்கள் மூலம் குளங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ஒவ்வொரு நீரேற்று நிலையத்திலும், 8 மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன; இவற்றில், ஆறு மோட்டார்கள் இயக்கப்பட்டு, நீரேற்றம் செய்யப்படும்.
எலெக்ட்ரிக்கல் ஆட்டோ மெஷின் மற்றும் குளம், குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள ஓ.எம்.எஸ் ஆகியவை இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை. உலகின் சிறந்த 'அப்டேட்' தொழில்நுட்ப உபரணங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் அதிகாரிகள். குழாய் பதிக்கப்பட்டிருக்கும் 1,065 கி.மீட்டர் தூரத்தில் ஐந்து இடங்களில் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்தும், ஐந்து இடங்களில் நெடுஞ்சாலையைக் கடந்தும் குழாய்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்தத் திட்டம் குறித்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த ஆட்சியில் காளிங்கராயன் அணைக்கட்டு பகுதியிலிருந்து உபரிநீரை பம்ப் செய்ய நிலம் கையகப்படுத்தவில்லை. இதனால், குழாய்களும் பதிக்கப்பட முடியாமல் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மூன்று நீரேற்று நிலையங்களுக்கான இடம் வாங்கப்பட்டது. அதன் பிறகு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, கடந்த ஜனவரி 2023-ல் முடிவடைந்தது. ஆனால், பவானி ஆற்றில் உபரிநீர் வரவில்லை. தற்போது பவானி ஆற்றில் உபரிநீர் வருகிறது. தற்போது, தொடங்கப்பட்டிருக்கும் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் காளிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் கால்வாயிலிருந்து 1.5 டி.எம்.சி நீர், 6 நீரேற்று நிலையங்கள் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை பகுதிகளிலுள்ள 1,045 குளங்களுக்கும் அனுப்பப்படுகிறது. தொடக்க விழா
கீழ்பவானி பாசனக் கால்வாயில் கடந்த 15-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதிலிருந்து வரும் கசிவுநீர் 10 அல்லது 15 நாள்களுக்குள் காளிங்கராயன் அணைக்கட்டுப் பகுதிக்கு வந்துவிடும். இது தவிர பவானி ஆற்றில் பெய்த மழையால் தற்போது அணைக்கட்டு பகுதிக்கு உபரிநீர் வந்துகொண்டிருக்கிறது. அதனடிப்படையில் தற்போது இங்கிருந்து நீர் 1,045 குளங்களுக்கும் அனுப்பப்படுகிறது. மொத்தமுள்ள 1,045 குளங்களில் 1,020 குளங்களுக்கு நீர் சென்றுவிடும். ஒருசில இடங்களில் பைப்லைனில் பழுது இருப்பதால் அங்கு தண்ணீர் செல்லவில்லை. அதுவும் விரைவில் சரிசெய்யப்பட்டும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/TC2HD2
Saturday 17 August 2024
Home »
» அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: காமராஜர் தொடங்கி ஸ்டாலின் வரை... கோரிக்கை நிறைவேறிய பாதை!