தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாப்பிள்ளை யூரணி ஊராட்சியில் ஜோதிபாசு நகர் எனும் பகுதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் பல்வேறு அரசின் துறைகள் சார்ந்த அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டார்கள். கட்டபொம்மன் வேடத்தில் வந்த கல்லூரி மாணவி
கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். சாலை வசதி, மின் விளக்கு, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டவர்கள் மனு அளித்தனர். அத்துடன் 12 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி ஏ.பி.சி மகாலெட்சுமி மகளிர் கல்லூரியில் மூன்றாவது ஆண்டு வேதியல் பிரிவில் கல்வி பயின்று வரும் மாணவி சந்தியா வீரபாண்டிய கட்டபொம்மன் வேடமணிந்து மனு அளிக்க வந்தார்.
திடீரென கட்டபொம்மன் வேடமணிந்து வந்தபோது அனைவரும் வியப்புடன் பார்த்தனர். இதுகுறித்து அந்த மாணவியிடம் பேசினோம், ”மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் குடியிருந்து வருகின்றனர். இந்த மக்களில் பல குடும்பங்களின் குடியிருப்பு மனைகளுக்கு இலவசவீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. கிராமசபைக் கூட்டம்
இது குறித்து பலமுறை மனு அளித்தும் எந்த பலனுமில்லை. ஏனென்றால் இந்த ஊராட்சி, தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்து 16 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கூடாது என, தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஆணையை ரத்து செய்து இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட வேண்டும் என, பாஞ்சாலங்குறிச்சி மண்ணின் சுதந்திரப் போராட்ட வீரர், வீரபாண்டிய கட்டபொம்மனின் வேடமணிந்து மனு அளித்துள்ளேன்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/TBy2qn
Thursday 15 August 2024
Home »
» தூத்துக்குடி: கிராம சபைக் கூட்டத்தில் கட்டபொம்மன் வேடமணிந்து மனு அளித்த கல்லூரி மாணவி!