"எவ்வளவு மழை வந்தாலும் சமாளிப்போம்" என்று மீண்டும் சவால் விட்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஒவ்வொரு பருவமழைக்கு முன்பாகவும், இப்படி முழங்குவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார் ஸ்டாலின். அதேபோல, சென்னை மூழ்குவதும் வாடிக்கையாகவே இருக்கிறது என்பதுதான் கொடுமை.கூவம் ஆற்றில் கட்டடக் கழிவுகள்
'வாய்புளித்ததோ... மாங்காய் புளித்ததோ' என்று சொல்லவில்லை. கடந்த ஆண்டின் டிசம்பரில் வரலாறு காணாத அளவுக்கு சென்னையே மூழ்கிப் போனதை யாராவது மறுக்க முடியுமா? பல ஆயிரம் கோடிகளை நிவாரணப் பணிக்காக செலவிட்டதை மறுக்க முடியுமா? பற்பல ஆயிரம் கோடிகளைக் கேட்டும் மத்திய அரசு கொடுக்காமல் இருப்பதையும் மறக்க முடியுமா? வெள்ளாத்தல் பல உயிர்கள் பலியாகின. வீடுகள், வாகனங்கள், உடமைகள் என்று எல்லாவற்றையும் இழந்து வீதிக்கு வந்தனர் மக்கள். இதையெல்லாம் மறக்கமுடியுமா?
தி.மு.க ஆட்சியைப் பிடித்த 2021-ம் ஆண்டிலிருந்து கோடி கோடியாகக் கொட்டி மழைநீர் கால்வாய்களைச் சரி செய்துகொண்டே இருக்கிறார்கள். இந்த முறையும்கூட செப்டம்பருக்குள் முடித்துவிடுவோம் என்று வாக்குறுதிக் கொடுத்தார், கமிஷனராக இருந்த ராதாகிருஷ்ணன் (கடைசியில், அவரையே வேறு இடத்துக்கு மாற்றிவிட்டது தனிக்கதை). இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம், இந்த தி.மு.க அரசின் ஆமைவேக செயல்பாடுகளை.
இந்த லட்சணத்தில்தான், 'எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சமாளிப்போம்' என்று சவால் விடுகிறார் மு.க.ஸ்டாலின். மழைநீர் கால்வாய்களை சீரமைப்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஓரளவுக்கு சென்னையைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் கூவத்தில் கல், மண் என்று கொட்டி மூடிக் கொண்டிருப்பதை முதலில் தடுத்து நிறுத்தவேண்டும். இல்லையென்றால்... 'இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னை வெள்ளக்காடாக மாறியது' என்று மீண்டும் வரலாறு படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
பருவமழை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ‘எது எப்படி போனா எனக்கென்ன...’ என்று கூவம் ஆற்றில் மதுரவாயல்- துறைமுகம் ஈரடுக்கு நெடுஞ்சாலைக்கான பணிகளுக்காக மண்ணை கொட்டி சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கூவம் ஆற்றில் கட்டடக் கழிவுகள்மூடப்படும் கூவம்... காத்திருக்கும் பெருமழை வெள்ளம்... சென்னையை காப்பாற்றப்போவது யார்?
சமீபத்தில் பருவழை முன்னேற்பாடு குறித்தான ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. அப்போது பருவ மழைக்குள் கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கல் மற்றும் மண் அகற்றப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரை எந்தப் பணிகளும் தொடங்கப்படவில்லை. மாறாக, பறக்கும் சாலைக்கான பணிகள் தொடர்கின்றன. சொல்லப்போனால், கூடுதலாக கட்டடக்கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டி மேற்கொண்டும் கூவத்தை மேடாக்கிக் கொண்டுள்ளனர்.
வயநாடு சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதால் சென்னை, பருவமழைக்கு இப்போதே நீரியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். ஆனால், கூவம் ஆற்றுக்குள்ளேயே சாலைப் பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து, கடந்த மே மாதமே விகடன் இணையதளத்தில் கட்டுரைகளும், பசுமை விகடன் சமூக வலைதளத்தில் வீடியோக்களும் வெளியிட்டிருந்தோம். கட்டுரையை வெளியிட்ட கையோடு, சம்பந்தப்பட்ட துறைகளின் (1. முதன்மைச் செயலாளர், பொதுப்பணித்துறை, 2. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ), 3. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், 4. பெருநகர சென்னை மாநகராட்சி, 5. தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் சீரமைப்புத்துறை, 6. சென்னை மாவட்ட ஆட்சியர், 7. தலைமைப் பொறியாளர் (நீர் வள அமைப்பு) மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது), பொதுப்பணித்துறை.) அதிகாரிகளுக்கெல்லாம் விரிவான கடிதங்களையும் அனுப்பி வைத்தோம்.கூவம் ஆற்றில் கட்டுமான பணிகள்``செப்டம்பர் மாதத்துக்குள் கூவம் ஆற்றில் உள்ள கட்டடக் கழிவுகள் அகற்றப்படும்...'' - அமைச்சர் நேரு
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை கூட்டிய நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் அசோகன், 'மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டப் பணி தொடர்பாக எங்களிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. எனவே, கூவம் ஆற்றில் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை சில உறுதிமொழிகளை இரண்டு நாள்களில் கையெழுத்திட்டுக் கொடுக்கவுள்ளனர். என்றாலும், அத்துமீறி பணிகளை மேற்கொண்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களில் தேசிய நெடுஞ்சாலைத் துறை மீது புகார் கொடுத்துள்ளோம். அதற்காகத் தற்போது பணிகள் நிறுத்தி வைத்துள்ளனர்’ என்று சொன்னார்.
இதுதொடர்பாக துறையின் கீழ்மட்ட அதிகாரிகளுக்கு, 'கூவம் ஆற்றில் கொட்டப்படும் கட்டடக்கழிவுகளை உடனடியாக அகற்றவேண்டும். இதை உறுதிப்படுத்த வேண்டும்' என்று கடிதங்களை அனுப்பினார்கள். அவற்றின் நகல்களை நமக்கும் அனுப்பினார்கள். ஆனால், அதற்குப் பிறகுதான் பணிகள் இன்னும் வேகமெடுத்துள்ளன. முன்பு சின்ன வண்டிகளில் வந்து கொட்டியவர்கள், தற்போது பெரிய வண்டிகளில் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். கூடவே, 16 சக்கரங்கள் கொண்ட பெரிய லாரிகளில் பெரியபெரிய இரும்பு கட்டுமான அமைப்புகளையும் கூவத்துக்குள் கொண்டு வந்து குவிக்க ஆரம்பித்துள்ளனர். ஆகக்கூடி, தமிழ நீர்வளத்துறை சொன்னபடி எதுவுவே நடக்கவில்லை.கூவம் ஆற்றில் கட்டடக் கழிவுகள் அதன்மீது பணிகள்
கட்டட கழிவுகளைக் கொட்டினால் ஆற்றின் நீரோட்டம் பாதிக்கும் என்பதுகூட தெரியாதவர்கள்தான் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்களா... அல்லது பறக்கும் சாலையை அமைத்துக் கொண்டிருக்கும் கட்டுமான நிறுவனத்தின் 'கவனிப்பு'கள் காரணமாக கண், வாய் மூடிக்கிடக்கிறார்களா? என்றுதான் கேட்கத்தோன்றுகிறது!
http://dlvr.it/TBsrJf
Tuesday 13 August 2024
Home »
» மீண்டும் மீண்டும் கொட்டப்படும் கட்டடக் கழிவுகள்...
சவால் விடும் முதலமைச்சர்... சமாளிக்குமா சென்னை?