செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
கடந்த அதிமுக ஆட்சியில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மோசடியில் ஈடுபட்டதாக தற்போதைய திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். வருடக்கணக்கில் இந்த வழக்கு விசாரணை நீண்டு கொண்டிருக்கும் நிலையில், செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கேட்டு தொடர்ச்சியாக முயன்று வருகிறது. அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் கடும் ஆட்சேபனையும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து, அவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனுவை, நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி
அப்போது அமலாக்கத்துறையிடம் உச்ச நீதிமன்றம், காட்டமாகச் சில கேள்விகளை எழுப்பியது. அதைத் தொடர்ந்து இரு தரப்பு வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்த நிலையில் இன்று (14-08-2024) செந்தில் பாலாஜியின் ஜாமீன் மேல்முறையீடு மனு வழக்கில், தீர்ப்பு வழங்கவிருக்கிறது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா அல்லது என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் எகிறியிருக்கிறது! `புனையப்பட்ட வழக்கு..!’ - குற்றச்சாட்டு பதிவு; மறுத்த செந்தில் பாலாஜி - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
http://dlvr.it/TBtnbd
Wednesday 14 August 2024
Home »
» Tamil News Live Today: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!