இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடந்துவரும் போரில் 39,000-க்கும் மேற்பட்ட குடிமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய போருக்கு உலக நாடுகள் இன்னமும் தீர்வுகாணவில்லை. தற்போதுவரை போர் முடிவுக்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் இல்லை. உலக நாடுகளின் எச்சரிக்கையை தொடர்ந்தும், ஐ.நா சபையின் கண்டிப்புக்குப் பிறகும், தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதற்கு பதிலடி என ஹமாஸ் அமைப்பும், லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பும் எதிர்த்தாக்குதலை நடத்தின.இஸ்மாயில் ஹனியே
கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவத் தளபதி ஃபுஆத் சுக்ர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவும் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கும் இஸ்ரேல்தான் காரணம் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால், இது தொடர்பாக இஸ்ரேல் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேயின் மரணத்துக்குப் பிறகு, புதிய தலைவராக யாஹ்யா சின்வார் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக ஹமாஸ் அமைப்பின் அறிக்கையில், ``ஹமாஸ் இயக்கத்தின் படுகொலை செய்யப்பட்ட தியாகி, தளபதி இஸ்மாயில் ஹனியேவுக்குப் பிறகு, இயக்கத்தின் அரசியல் பணியகத்தின் தலைவராக தளபதி யாஹ்யா சின்வார் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.
தெற்கு காஸா நகரமான கான் யூனிஸில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்த யாஹ்யா சின்வார்(61), 2017-ம் ஆண்டில் காஸாவில் ஹமாஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இஸ்மாயில் ஹனியே - யாஹ்யா சின்வார்
அதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் ஒரு தவிர்க்கமுடியாத எதிரி என ஹமாஸ் அமைப்பால் குறிப்பிடப்பட்டார். ஹமாஸ் அமைப்பில் இணைவதற்கு முன்பு அல் மஜ்த் எனும் பாதுகாப்பு அமைப்பின் தலைவராக இருந்த இவர், அப்போதே, இஸ்ரேலுக்கு ஆதரவாக, ரகசிய சேவையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பாலஸ்தீனியர்களை கண்காணித்து அவர்களை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். அற்காக சிறையிலும் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பித்தக்கது.24 ஆண்டுகள் சிறை; Hamas-ன் முக்கியப்புள்ளி; இஸ்ரேல் டார்கெட் செய்யும் Yahya Sinwar! - யார் இவர்?
http://dlvr.it/TBcFw9
Wednesday 7 August 2024
Home »
» Yahya Sinwar: இஸ்மாயில் ஹனியே மரணம்; ஹமாஸின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் தேர்வு!