`திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்’
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27-ம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கிறார். அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக அமைச்சரவை கூட்டமும் நடந்து முடிந்திருக்கிறது. அந்த கூட்டத்திலேயே, `அமைச்சர்கள் அனைவரும் சரியாக அவரவர் பணிகளைச் செய்யவேண்டும். யார் என்ன செய்கிறார்கள் என்பதை நான் கவனித்துக்கொண்டேதான் இருக்கிறேன்’ என்று எச்சரிக்கும் தொனியில் பேசியிருந்தார்.திமுக மா.செ கூட்டம் / புத்தக வெளியீடு
இந்த சூழலில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று(16-08-2024) அறிவாலயத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் எழுதிய `தென் திசையின் தீர்ப்பு’ புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தக வெளியிட்டு விழா முடிந்தும் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தொடர்ந்து தேர்தலில் வெற்றிக்கு நன்றி தொடங்கி, முப்பெரும் விழா கூட்டம், முத்தமிழறிஞருக்கு நாணயம் வெளியிடத்துக்கு மத்திய அரசுக்கு நன்றி, நிதி பகிர்வில் தமிழகத்துக்கு வஞ்சனை காட்டிய மத்திய அரசுக்குக் கண்டனம் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எச்சரிக்கை விடுத்த முதல்வர்!
இதனைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் பேசும்போது தேர்தலில் தொடர்ந்து பணியாற்றும் நிர்வாகிகளுக்கும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், ``அடுத்ததாக, 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் நமது இலக்கு அதனை நோக்கிச் செயல்படவேண்டும். மக்களுக்கு நாம் செய்திருக்கும் நலத் திட்டங்களை வாக்குகளாக மற்ற அனைவரும் பணியாற்றவேண்டும். கழகத்தில் உள்ள சார்பு அணிகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும்.திமுக மா.செ கூட்டம்
அனைத்து அமைப்புகளும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி அறிக்கையைக் கழகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். நான் அமெரிக்காவுக்குச் சென்றாலும் கழகத்தையும், அரசையும் கவனித்துக்கொண்டேதான் இருப்பேன். நடைபெறவுள்ள கலைஞர் 100 நாணயம் வெளியிட்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டும். அடுத்த தலைமுறைக்கு நமது கழகத்தைக் கொண்டு செல்லும் வகையும் அனைவரும் பணியாற்ற வேண்டும்" என்று பேசினார்.
கலக்கத்தில் மா.செ!
இடையில் முதல்வர் பேசும்போது, "இங்குள்ள சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கிறது. அதேபோல, நிர்வாகிகள் குறித்தும் தலைமை கழகத்துக்குப் புகார்கள் வந்திருக்கின்றன. அந்த புகார்கள் குறித்து விசாரிக்கப்படும். உழைப்புக்கு ஏற்ற உயர்வு அனைவர்க்கும் இருக்கும். நிர்வாகிகளை அரவணைத்துச் செல்பவர்களே மாவட்டச் செயலாளர்களாக இருப்பார்கள். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்யும் கவுன்சிலர்கள் மீது பதவி பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மாவட்டச் செயலாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று பேசியிருந்தார். மேலும் முதல்வர் புகார் அதிகம் வந்த மாவட்டச் செயலாளர்களைக் கேள்வி எழுப்பி ஒழுங்காகச் செயல்படவேண்டும் என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.திமுக மா.செ கூட்டத்தில் ஸ்டாலின்
அதனைத் தொடர்ந்து அமைப்பு ஒருங்கிணைப்புக் குழு செயல்பாடுகள் குறித்துப் பேசினார். பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசும்போது, "நீங்கள் மகிழ்ச்சியாக அமெரிக்காவுக்குச் சென்று திரும்புங்கள். கட்சியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்று பேசியிருந்தார்.
கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்தும், மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்தும் எதுவும் பேசப்படவில்லை. அதேசமயத்தில், திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் நடைபெறும் என்று பேசப்பட்டிருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் செயல்படாத மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசியிருப்பது பல மா.செ-களுக்கு கலகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88உதயநிதிக்குத் துணை முதல்வர்: `பழுக்கவில்லை..!’ ஸ்டாலினின் சூசக பதிலுக்குப் பின்னால்?!
http://dlvr.it/TC1Zgz
Saturday 17 August 2024
Home »
» எச்சரிக்கை விடுத்த முதல்வர்... கலக்கத்தில் மாவட்டச் செயலாளர்கள்..! - திகு திகு திமுக கூட்டம்