சென்னை - மத்தியில் கடந்த காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி ஆட்சியின் போதுதான்ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், மக்களுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும்அனுமதிக்க முடியாது என்றும் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. டெல்லி செல்லும் முன் நேற்று சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கடந்த காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சியின்போது ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வந்ததாக தெரிவித்தார்.இதனை அங்குள்ள மக்கள் ஏற்காத நிலையில், தமிழக அரசு ஒருபோதும் இத்திட்டத்தை ஏற்காது என உறுதிபடத் தெரிவித்தார். டெல்லியில் நேற்று மாலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, டி. ஜெயக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமரை சந்தித்தனர்.





