சென்னை : சசிகலா அணியினர் மிரட்டி அவமதித்ததால் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதி தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் கண்ணப்பன் (43). இவர் தற்கொலை செய்து கொண்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளருக்கு ஆதரவாக கண்ணப்பன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் அவரது மரணம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.Monday, 27 March 2017
ஓ.பி.எஸ்., ஆதரவாளர் தற்கொலை
சென்னை : சசிகலா அணியினர் மிரட்டி அவமதித்ததால் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதி தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் கண்ணப்பன் (43). இவர் தற்கொலை செய்து கொண்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளருக்கு ஆதரவாக கண்ணப்பன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் அவரது மரணம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.டிரைவிங் லைசென்சுக்கு ஆதார் கட்டாயமாகிறது
புதுடில்லி : டிரைவிங் லைசென்ஸ் வழங்கும்போதும், புதுப்பிக்கும் போதும் ஆதார் எண்ணை கேட்டு வாங்க மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரே நபர் பல இடங்களில் லைசென்சு வாங்குவது, போக்குவரத்து குற்றங்களிலிருந்து தப்பிக்க போலி லைசென்ஸ் வாங்குவதை தடுக்க முடியும். இந்த நடைமுறை வரும் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.டேட்டாபேஸ்:
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய போக்குவரத்து அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. டிரைவிங் லைசென்ஸ் வழங்குவது மாநில அரசின் கட்டுப்பாட்டில் வந்தாலும், வெவ்வேறு மாநிலங்களில்,வெவ்வேறு ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் மூலம் பல லைசென்ஸ் வாங்குவதை தடுக்க இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் அடையாளத்தை கண்டுபிடிக்க ஆதார் மட்டுமே போதுமான அடையாளமாக இருக்கும். ஆதார் இல்லாதவர்கள் வேறு சில சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அளிக்கும் சான்றுகளை அதிகாரிகள் பதிவு செய்ய தேவையான மாற்றங்ளை மத்திய அரசு செய்து வருகிறது. இதற்கான தனியாக லைசென்ஸ் குறித்த டேட்டா பேஸ் உருவாக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்கள் வேறு எங்காவது லைசென்ஸ் பெற்றுள்ளார்களா என்பது பற்றி அறிய அனைத்து ஆர்.டி.ஓ., அலுவலகங்களும் இந்த டேட்டாபேசை பார்க்கும் வசதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.தற்போது நாடு முழுவதும் 18 கோடி டிரைவிங் லைசென்சுகள் வழங்கப்பட்டுள்ளது என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பணம் கொடுப்பதில்தான் வியூகம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: ‛ஆர்.கே. நகரில்பணம் கொடுப்பதில் வியூகம் வகுப்பதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசு, விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டில்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் மீது மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இது வேதனை அளிக்கிறது. தமிழக அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறையில்லை. ஆர்.கே. நகரில் பணம் கொடுக்க வியூகம் வகுப்பதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது. ஆர்.கே. நகரில் முதல்வர் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, டில்லி சென்று விவசாயிகளை சந்திக்க வேண்டும். வளமையான விவசாயம் என முழக்கமிட்ட பா.ஜ.,அரசும் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை. தமிழக அரசு ஏற்கனவே கூறியிருக்கும் ரூ.62 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாகவழங்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.மன அழுத்த பாதிப்பு: பிரதமர் அறிவுரை
புதுடில்லி: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், மன அழுத்தத்திலிருந்து அனைவரும் வெளி வரலாம். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் உதவ வேண்டும். நமது எண்ணத்தை வெளிப்படுத்தி, மன அழுத்தத்தை தோற்கடியுங்கள். எப்போதும், உங்களது எண்ணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது சிறந்ததாக இருக்கும். இவ்வாறு அவர்பே
சினார்.
உணவு வீணடிப்பு: பிரதமர் கவலை
புதுடில்லி: உணவு வீணாக்கப்படுவது கவலையளிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.புகழாரம்:
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: சுதந்திர தினத்தை கொண்டாடும் வங்கதேசத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன். அந்நாட்டு மக்களுடன் இந்தியா தோளோடு தோள்நிற்கும். பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் மரணத்தை கண்டுபயப்படவில்லை. அவர்கள் நாட்டுக்காக வாழ்ந்து மரணமடைந்தனர். சத்தியாகிரக போராட்டத்தின் 100வது ஆண்டை நாம் கொண்டாடுகிறோம். காந்தி போராட்டத்தில் இது முக்கியமானது ஆகும்
புது இந்தியா:
125 கோடி மக்கள் புது இந்தியாவை விரும்புகின்றனர். புது இந்தியாவை உருவாக்க அனைவரும் உதவ வேண்டும். உங்கள் கனவை நனவாக்கும் வகையில் புது இந்தியா அமையும் . புது இந்தியாவை உருவாக்க இணைந்து பணியாற்றுவோம்
போர் வீரனாக...:
ரூபாய் நோட்டு வாபசை ஆதரித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். டிஜிட்டல் இந்தியா திட்டம் ஊழலை ஒழிக்க உதவும். 1.5 கோடி மக்கள் பீம் ஆப்பை பயன்படுத்துகின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்தி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும். இதனை நோக்கி மக்கள் வருகின்றனர். கறுப்பு பணம் மற்றும் ஊழலை மக்கள் நிராகரித்து விட்டனர். கறுப்பு பணத்திற்கு எதிராக ஒவ்வொரு மக்களும் வீரர் போல் செயல்பட வேண்டும்.
கவலை:
தூய்மைப்பணி ஒரு பழக்கவழக்கமாக மாறிவிட்டது. உணவு வீணாக்கப்படுவது எதிர்பாராதது. வீணாகும் உணவை, பலர் தொழில்நுட்பம் கொண்டு மற்றவர்களுக்கு வழங்கி உதவி வருகின்றனர். உணவு வீணடிக்கப்படுவது கவலையளிக்கிறது. இது சமூகத்திற்கு எதிரானது. மத்திய அரசு பணியில் உள்ள கர்ப்பிணிகளுக்கு பிரசவ கால விடுமுறை 26 வாரங்கள் வழங்கப்படும். குழந்தைகளை பராமரிப்பதே இதன் நோக்கம் ஆகும். இதன் மூலம், குழந்தைகளுக்கு தாயின் முழு அன்பு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.








