ஸ்ரீநகர்:காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள சினார் பக்கில் சூன்டேகுல் குடிசை பகுதியில் நேற்று(மார்ச்-27) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல வீடுகள் எரிந்து நாசமடைந்தன. தீயை அணைப்பதற்காக போராடிய இரு வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.காற்று வேகமாக வீசியதால் பல குடிசைகள் உள்பட சில பெரிய வீடுகளும் எரிந்து சாம்பலாயின. விபத்து குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.Tuesday, 28 March 2017
காஷ்மீர் தீ விபத்து: குடிசை வீடுகள் எரிந்து நாசம்
ஸ்ரீநகர்:காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள சினார் பக்கில் சூன்டேகுல் குடிசை பகுதியில் நேற்று(மார்ச்-27) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல வீடுகள் எரிந்து நாசமடைந்தன. தீயை அணைப்பதற்காக போராடிய இரு வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.காற்று வேகமாக வீசியதால் பல குடிசைகள் உள்பட சில பெரிய வீடுகளும் எரிந்து சாம்பலாயின. விபத்து குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.பறக்கும் படையாக பன்னீர் டீம்: பணம் கொடுக்க தடுமாறும் அமைச்சர்கள்
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், போட்டியிடுகிறேன்; வெற்றி பெறுவேன் என்று, சசிகலா அணியின் வேட்பாளர் தினகரன், தைரியமாக சொல்லி வந்தாலும், உள்ளுக்குள் கடும் உதறலில் இருப்பதாக கூறப்படுகிறது.போன் உத்தரவு:
ஒவ்வொரு முறை தேர்தல் பிரசாரத்துக்கு புறப்படுவதற்கு முன்னும், களத்தில் இருக்கும் அத்தனை அமைச்சர்களுக்கும் போன் போட்டு பேசுகிறார்.இன்றைக்கு எந்தப் பகுதிக்குச் சென்றீர்கள்? எவ்வளவு பேரை பார்த்தீர்கள்? எவ்வளவு பேருக்கும் எவ்வளவு கொடுக்கப்பட்டது என்ற விவரங்களையெல்லாம் கேட்கிறார். துவக்கத்தில் உற்சாகமாக பதில் அளித்த அமைச்சர்கள், சில நாட்களாக, தினகரன் கேட்கும் கேள்விகளுக்கு உற்சாகமாக பதில் அளிக்க முடியாமல் தடுமாறி வருவதாகக் கூறப்படுகிறது.
காரணம், அமைச்சர்கள் எங்கு பணம் கொடுக்கச் சென்றாலும், அந்தப் பகுதியில் முன் கூட்டியே, பன்னீர் தரப்பு ஆட்கள் குவிந்து விடுகின்றனர். பல இடங்களில் மக்களை வளைக்கவும் முடியாமல், பணம் கொடுக்கவும் முடியாமல் அமைச்சர்கள் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து, அமைச்சர் ஒருவர் கூறியதாவது:பணம் கொடுத்தால், நிச்சய வெற்றி என்று தினகரன் நினைத்துக் கொண்டு இடைத்தேர்தல் களத்துக்கு வந்து விட்டார். பணம் வாங்குகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், பணம் கொடுப்பதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. பன்னீர்செல்வம் தரப்பினரும், நேற்று வரை நம்மோடு இருந்தவர்கள் தானே. கட்சியினர் அவ்வளவு பேரும், அவர்களிடமும் இன்றளவிலும் தொடர்பில் இருக்கின்றனர்.
பணம் கொடுக்க முயற்சி:
மக்களுக்கு பணம் கொடுக்க, என்னதான் ரகசியமாக திட்டம் போட்டு செயல்பட்டாலும், பன்னீர்செல்வம் தரப்பினர், குறிப்பிட்ட ஏரியாவுக்கு, நாம் போய் சேர்வதற்கு முன்பாகவே சென்று விடுகின்றனர். நாம் போகும் போது, நம்மை பணம் கொடுக்கவிடாமல் தடுக்க அவர்கள் தயாராக இருக்கின்றனர். பல இடங்களிலும் இப்படி ஆகி விட்டது. பறக்கும் படை போல பன்னீர்செல்வம் அணியினர் செயல்படுகின்றனர். மதுசூதனன் லோக்கல் வேட்பாளர் என்பதால், நம்மைக் காட்டிலும் தொகுதிக்குள் அவர்கள் பலமாக உள்ளனர். இந்த யதார்த்தத்தைச் சொன்னால், தினகரன் புரிந்து கொள்வதில்லை. கோபப்படுகிறார். பணத்தை செலவழிக்க, அமைச்சர்கள் தயங்குவது போல நினைக்கிறார். இதற்கெல்லாம் என்ன செய்வதென்றே புரியவில்லை.இவ்வாறு அந்த அமைச்சர் புலம்பித் தீர்த்தார்.
அ.தி.மு.க. அம்மா அணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
சென்னை: அ.தி.மு.க. அம்மா அணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடபட்டது. ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப். 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. அம்மா அணியின்தினகரன் போட்டியிடுகிறார். இதையடுத்து அந்த அணியின் தேர்தல் அறிக்கையை பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட முதல்வர் பழனிசாமி பெற்றுக்கொண்டார்.
அறிக்கை விவரம்:
* ஆர்.கே. நகரில் 10 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
* 57 ஆயிரம் பேருக்கு வீடுகள் வழங்கப்படும்.
* வேலைவாய்ப்புக்கான ஆலோசனை மையம் அமைக்கப்படும்.
* அரசு மற்றும் வங்கி பணியாளர் தேர்வுகளுக்கு பயிற்சி மையம் அமைக்கப்படும்.
* அரசு வசதிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்.
* கொடுங்கையூர் குப்பை கிடங்கு மாசு இல்லாமல் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* இத்தொகுதியில் அரசு, தனியார் வங்கி கிளைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தனர்.
விமானத்தில் எம்.பி.,க்கு தடை : லோக்சபாவில் காரசாரம்
புதுடில்லி : விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி.,க்கு விமான நிறுவனங்கள் தடை விதித்துள்ளன. இது தொடர்பாக, இன்று லோக்சபாவில் காரசார விவாதம் நடந்தது.எம்.பி.,க்கு வந்த சிக்கல் :
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா எம்.பி.,யான ரவீந்திர கெய்க்வாட், சில நாட்களுக்கு முன் விமான பயணம் செய்தார். அவருக்கு இருக்கையை மாற்றிக் கொடுத்தது தொடர்பாக விமான நிறுவன ஊழியருக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த எம்.பி., விமான ஊழியரை செருப்பால் அடித்துள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரவீந்திர கெய்க்வாட் விமானத்தில் பயணம் செய்ய ஏர்இந்தியா உள்ளிட்ட 7 விமான நிறுவனங்கள் தடை விதித்தன.
விமான நிறுவனம் செய்தது சரியே :
இது தொடர்பாக லோக்சபாவில் சிவசேனா எம்.பி.,க்கள் இன்று குரல் எழுப்பினர். சிவசேனாவிற்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சியினரும், எம்.பி., பயணத்திற்கு தடை விதிக்கும் அதிகாரம் விமான நிறுவனத்திற்கு இல்லை என பேசினர். அப்போது பேசிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ, சிறந்த பாதுகாப்பு விதிமுறைகளை விமான அமைச்சகம் செய்துள்ளது. விமான நிறுவனம் நடந்து கொண்ட விதம் சரியானதே. இது போன்ற பிரச்னையில் எம்.பி.,ஒருவர் சிக்கியது தான் துரதிஷ்டவசமானது என்றார். இந்த விவகாரம் தொடர்பாக சிவசேனா எம்.பி.,க்களும் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
ரகசிய இடத்தில் எம்.பி., :
இதற்கிடையில் சர்ச்சையில் சிக்கிய சிவசேனா எம்.பி., ரவீந்திர கெய்க்வாட் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பார்லிக்கு வந்த அக்கட்சி எம்.பி.,க்களிடம் கேட்டதற்கு, அவர் மாயமான விவகாரம் தொடர்பா
ஆர்.கே.நகர் தேர்தல் : நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னை : சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று (மார்ச் 27) வெளியிடப்பட உள்ளது. மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.களத்தில் இருப்பது யார் யார்? :
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன், அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன், பாஜக சார்பில் கங்கை அமரன் உள்ளிடோர் போட்டியிடுகின்றனர்.
நேற்று கடைசி நாள் :
தற்போது 82 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள இன்று கடைசி நாள் ஆகும். பிற்பகல் 3 மணிக்குள், மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதையடுத்து மாலை 5 மணிக்கு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
ஜெட்லியுடன் வைகோ சந்திப்பு
புதுடில்லி : டில்லி ஜந்தர்மந்திரில் தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று கலந்து கொண்டார். இதனையடுத்து இன்று காலை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை அவரது வீட்டிற்கு சென்று வைகோ சந்தித்துள்ளார். அப்போது, 13 வது நாளாக விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு விரைவில் தீர்வு காண வேண்டும். தமிழக வறட்சி நிவாரண பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைகோ வலியுறுத்தி உள்ளார்.





