இந்தியாவில் தற்போது 87 மில்லியன் பெண்கள் தீவிர வறுமை நிலையில் உள்ளதாகவும், கோவிட்-19 நெருக்கடி காரணமாக 2021ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 100 மில்லியனாக உயரும் என்றும் ஐநா அறிக்கை கூறியுள்ளது. ஐநா சபையின் பெண்கள் குறித்த வளர்ச்சித்திட்ட அறிக்கையின்படி 129 நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த தரவுகளில் 2021 ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 96 மில்லியன் மக்கள் தீவிர வறுமையால் பாதிக்கப்படும் வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதில் 47 மில்லியன் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு முன்பாக தீவிர வறுமையால் பாதிக்கப்பட்டிருந்தோர் சதவீதம் பெண்களில் 13.3% ஆகவும், ஆண்களில் 12.1%ஆகவும் இருந்தது. இதுவே 2021 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை பெண்களில் 14.7% ஆகவும், ஆண்களில் 13.7% ஆகவும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 1.90 டாலருக்கு குறைவான தொகையில் வாழும் மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்று இந்த கருத்துக்கணிப்பின் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. 129 நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வுகள் என்பது உலக மக்கள் தொகையில் 89 சதவீத பேரிடம் எடுக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 2019ஆம் ஆண்டில் 398.5 மில்லியன் பெண்கள் தீவிர வறுமையில் இருந்தனர், இது 2020 ஆம் ஆண்டில் 409 மில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் கொரோனா நெருக்கடி காரணமாக 2021ஆம் ஆண்டில் 435 மில்லியனாக இந்த எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நெருக்கடியால் உருவான விளைவுகள் வரும் 2030 ஆம் ஆண்டுவரை குறைய வாய்ப்பில்லை என்றும் இந்த அறிக்கை கூறியுள்ளது.
http://dlvr.it/RgdWC7
Tuesday 15 September 2020
Home »
» இந்தியாவில் 87 மில்லியன் பெண்கள் தீவிர வறுமையில் உள்ளனர் : ஐநா