சென்னையின் புறநகர் பகுதியான கும்மிடிப்பூண்டியில் வசித்து வருகின்றனர் மணிகண்டன் - மீனா தம்பதியினர். இவர்களுடைய 4 வயது மகள் ஷர்வினி. ஆகஸ்ட் 29ஆம் தேதி, சிறுமியைக் குளிப்பாட்ட சுடுதண்ணீரை பாத்ரூமுக்கு வெளியே வைத்திருக்கிறார் மீனா. வைத்துவிட்டு வேறு வேலையாக சென்றிருக்கிறார். அப்போது அங்குமிங்குமாக ஓடி விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென அலறியிருக்கிறார். மீனாவும், மணிகண்டனும் ஓடிச்சென்று பார்த்தபோது கொதிக்கும் தண்ணீர் மேலே கொட்டி, சிறுமி தரையில் கிடந்திருக்கிறார். சிறுமியின் பெற்றோர் உடனடியாக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு 20 நாட்கள் காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காயம் ஆழமாக இருந்ததால் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி, டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு தெரிவித்த போலீஸார், இது எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்து எனவும், இதனால் சிறுமியின் குடும்பத்தார் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதைப் படிக்க: பல்பை கழட்டியபோது மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு
http://dlvr.it/Rh7GzT
Tuesday 22 September 2020
Home »
» சென்னை: சுடுத்தண்ணீர் கொட்டி சிறுமி உயிரிழப்பு