ராஜஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் தான் 7-வது இடத்தில் களமிறங்கியதற்கான காரணத்தை தோனி விளக்கியுள்ளார். சார்ஜாவில் நேற்றிரவு நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்த 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்த நிலையில் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 2-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். தோனி 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். டாம் கரன் வீசிய இறுதி ஓவரில் தோனி ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி ரசிகர்களுக்கு விருந்தளித்தார். முன்னதாக 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய தோனி, டூ பிளஸிஸ் உடன் ஜோடி சேர்ந்தார். டூ பிளஸிஸை அடிக்கவிட்டு, அவருக்கு தோனி ஒத்துழைத்தார். தோனி 7-வது வீரராக களமிறங்குவதைவிட 3 அல்லது 4-வது வீராக களமிறங்கிருக்க வேண்டும். ஒருவேளை கெய்க்வாட் இடத்தில் தோனி களமிறங்கி இருந்தால், நிச்சயம் டூப்பிளசிஸுடன் சேர்ந்து ஆட்டத்தை நகர்த்திக் கொண்டு வந்திருப்பார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இச்சூழலில் ஏழாவது இடத்தில் களமிறங்கியதற்கான காரணத்தை தோனி விளக்கினார். “நான் நீண்ட காலமாக பேட்டிங் செய்யவில்லை. 14 நாள் தனிமைப்படுத்தல் உதவவில்லை. சாமுக்கு வாய்ப்புகளை வழங்க வெவ்வேறு விஷயங்களை முயற்சிக்க விரும்பினோம். இது வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் எப்போதும் உங்கள் பலத்திற்குச் செல்லலாம். ஃபாஃப் மிகவும் நன்றாக தகவமைத்துக் கொண்டார். 217 ரன்களை விரட்டுவதற்கு எங்களுக்கு ஒரு நல்ல ஆரம்பம் தேவையிருந்தது. ஆனால் அது அப்படி நிகழவில்லை. ஸ்டீவ் மற்றும் சாம்சன் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தனர். அவர்கள் பந்து வீச்சாளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் முதல் இன்னிங்ஸைப் பார்த்தவுடன், பந்து வீசுவதற்கான நீளம் உங்களுக்குத் தெரியும். எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசுவதில் பிழை செய்தனர். நாங்கள் அவர்களை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்’’ என்று தோனி கூறினார்.
http://dlvr.it/Rh9Pkf
Wednesday 23 September 2020
Home »
» 7வது இடத்தில் களமிறங்கியது ஏன்? - தோனி விளக்கம்