சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் லைன் அப்பில் மிகமுக்கியமான பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு. அவருக்கு இன்று பிறந்த நாள். இதே நாளில் ஆந்திராவின் குண்டூரில் 1985இல் பிறந்தார். Here’s wishing @RayuduAmbati a very happy birthday. ??Let’s celebrate the @ChennaiIPL batsman's special day revisiting his match-winning knock of 7⃣1⃣ against MI in the #Dream11IPL. ?Check it out ?? — IndianPremierLeague (@IPL) September 23, 2020 எட்டு வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தவர். வட்டம், மாவட்டம், மாநிலம் என அசத்தியவருக்கு 2013-இல் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு வந்தது. அதற்கு முன்னர் ஐ.சி.எல் கிரிக்கெட் தொடரிலும் ராயுடு விளையாடியுள்ளார். The legendary cake facials missing! ??? #SuperBirthday #WhistlePodu pic.twitter.com/G7uAIQ8sa3 — Chennai Super Kings (@ChennaiIPL) September 23, 2020 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ராயுடு இந்தியாவின் மிடில் ஆர்டரின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்திருந்தனர். இந்தியாவுக்காக இதுவரை 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ராயுடு 1694 ரன்களை குவித்துள்ளார். இதில் மூன்று சதங்களும், பத்து அரை சதங்களும் அடக்கம். கடந்த 2018 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ராயுடு ஐபிஎல் தொடரில் சென்னைக்காக மட்டும் 958 ரன்களை குவித்துள்ளார். Super Birthday dear Bahubali, AM-BA-TI-RAAY-DU! Wishing you a biryani of a year ahead. ?? #WhistlePodu #Yellove pic.twitter.com/8XfdZIOuiN — Chennai Super Kings (@ChennaiIPL) September 23, 2020 ‘இன்னைக்கு ஓப்பனிங் ஆடு இல்ல ஒன் டவுன் இல்ல நான்காவது பேட்ஸ்மேன்’ என போட்டி ஆரம்பித்த பிறகு தான் தோனியே ராயுடுவின் பேட்டிங் பொசிஷன் குறித்து அவரிடம் சொல்லுவார். ராயுடுவும் கேப்டன் சொல்லை தட்டாத பேட்ஸ்மேனாக சொன்ன இடத்தில் இறங்கி எதிரணி பந்து வீச்சை ரெய்டு விடுவார். இந்த சீஸனில் சென்னையின் வெற்றிக்காக ராயுடு மும்பைக்கு எதிரான போட்டியில் 71 ரன்களை அடித்திருந்தார். ஹேப்பி பர்த் டே ராயுடு...
http://dlvr.it/RhC5wb
Wednesday 23 September 2020
Home »
» சி.எஸ்.கே சிங்கம் அம்பத்தி ராயுடு பிறந்தநாள் இன்று