கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் லக்ஷ்மணன் - அனிதாமொழி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆலப்புழாவில் உள்ள தனது உறவினராக பினு என்பவர் வீட்டிற்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். திருமணம் முடிந்த பிறகு, ஞாயிறு மாலை அனிதாமொழியின் இரண்டு குழந்தைகள் மற்றும் பினுவின் மகனோடு கடற்கரைக்குச் சென்றிருக்கின்றனர். கடல் சீற்றம் சற்று அதிகமாக இருந்ததால் போலீஸார் கடற்கரையின் முன்பகுதியில் உள்ளே செல்ல அனுமதி கொடுக்கவில்லை. எனவே அங்குள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அருகிலுள்ள பகுதிக்குச் சென்றிருக்கின்றனர். பினு காரை நிறுத்தச் சென்றபிறகு, அனிதாமொழி மூன்று குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்துள்ளார். திடீரென வேகமாக எழும்பிய ராட்சத அலையால் அனிதாமொழி தடுமாறி விழுந்துள்ளார். பினு மற்ற இரண்டு குழந்தைகளையும் இழுத்துப் பிடித்துள்ளார். ஆனால் அனிதாமொழியின் கையிலிருந்த இரண்டரை வயது மகன் ஆதிகிருஷ்ணா கடலலையில் அடித்துச்செல்லப்பட்டான் என டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு போலீஸார் கொடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதனால் மாவட்ட குழந்தைகள் நலவாரியம், குழந்தைகளை கடற்கரைக்கு அழைத்துச் சென்றதற்காக அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
http://dlvr.it/RggLc9
Tuesday 15 September 2020
Home »
» செல்ஃபி மோகத்தில் இருந்த தாய் - கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டக் குழந்தை!!