ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஷார்ஜாவில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. தோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சைக்கு ஆயத்தமாகி வருகின்றன. ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 14 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 2014 ஆம் ஆண்டு அமீரகத்தில் நடைபெற்ற போட்டியிலும் சிஎஸ்கே வெற்றிப் பெற்றுள்ளது. ஐபிஎல்லில் சிஎஸ்கேவுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸின் சராசரி ரன் 155. இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக சிஎஸ்கேவின் சராசரி ரன் 163. சிஎஸ்கேவுக்கு எதிராக ஜோஸ் பட்லர் மொத்தம் 146 ரன்களை குவித்துள்ளார். அதேபோல ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே கேப்டன் தோனி மொத்தம் 423 ரன்களை குவித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் பவுலிங்கில் ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டுகளும், சிஎஸ்கே தரப்பில் ரவீந்திர ஜடேஜா 15 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். பீல்டிங்கை பொறுத்தவரை ஜோஸ் பட்லர் 5 கேட்சுகளையும், தோனி 13 கேட்சுகளையும் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு ஐபிஎல்லில் இரு அணிகளுக்கு எதிரான போட்டியில் தவறான முடிவை கொடுத்த அம்பயருக்கு எதிராக "டக் அவுட்"டில் இருந்து மைதானத்துக்குள் புகுந்து தோனி ஆக்ரோஷமாக விவாதம் செய்ததை யாராலும் மறக்க முடியாது. இறுதியாக அந்தப் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது.
http://dlvr.it/Rh5c8x
Tuesday 22 September 2020
Home »
» சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ்: ஐபிஎல் வரலாற்றில் யார் கெத்து?