உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள புதான் மாவட்டத்தில் வசிக்கும் தினகூலித் தொழிலாளி பன்னாலால்(43), அனிதா தேவி (40) தம்பதியினருக்கு இதுவரை ஐந்து பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார் அனிதா தேவி. இந்த முறை தனக்கு ஆண் குழந்தை பிறக்கவேண்டும் வேண்டும் என்று பன்னாலால் ஆசைப் பட்டுள்ளார். தனது மனைவியைப் பூசாரியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார் பன்னாலால். இந்த முறையும் பெண் குழந்தைதான் பிறக்கும் என்று பூசாரி குறி சொல்லியதாக கூறப்படுகிறது. கொலைமுயற்சி
இதனால் பன்னாலால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகச் சொல்லப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரவு குடிபோதையில் வீடு திரும்பிய பன்னாலால், கருவைக் கலைக்கும் படி தன் மனைவியைச் சரமாரியாக அடித்துள்ளார். அடிபட்டதில் மயங்கிக் கிடந்த மனைவியின் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று பார்க்க வயிற்றைக் கிழித்துப் பார்க்க முயற்சி செய்துள்ளார். வயிற்றைக் கிழித்ததில் அனிதா தேவி ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.
இதைப் பார்த்த உறவினர்கள், அனிதா தேவியை மீட்டு பரேலியில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கர்ப்பப்பையிலிருந்த குழந்தைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இருந்த போதிலும், அதிக ரத்தப் போக்கு காரணமாக அனிதா தேவியின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து, அவரின் சகோதரர் ரவிக்குமார் சிங் அனிதா தேவியை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க முயன்றுள்ளார். அந்த மருத்துவமனையில் பணம் கட்டினால் மட்டும் சிகிச்சையளிக்க முடியும் என்று செல்ல, டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இவருக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. கைது
இதையடுத்து, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டு பன்னாலால் கைது செய்யப்பட்டுள்ளார். நடந்த சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கணவன் கர்ப்பிணி மனைவியின் வயிற்றைக் கிழித்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
http://dlvr.it/Rh3SLp
Monday 21 September 2020
Home »
» உ.பி: கர்ப்பிணி மனைவி.. குழந்தை ஆணா, பெண்ணா?- வயிற்றைக் கிழித்த கொடூர கணவன்