5-ஆம் கட்ட தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் எதெற்கெல்லாம் தடை தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களில் செயல்பாட்டிற்கான தடை தொடரும். திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியங்கள், சுற்றுலாத்தலங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை தொடரும். மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும். புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கு தடை மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.
http://dlvr.it/RhdNqb
Wednesday 30 September 2020
Home »
» தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு: எதெற்கெல்லாம் தடை தொடரும்?