போபால் மெமோரியல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (பி.எம்.எச்.ஆர்.சி) தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள், போபால் விஷவாயுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், இவர்கள் உயிரிழப்புக்கு மருத்துவமனையின் அலட்சியமும், நிர்வாகமின்மையும்தான் காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக 1984-ம் ஆண்டு நிகழ்ந்த போபால் விஷவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டு, உயிர் தப்பியவர்கள் குழு, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவுக்குக் கடிதம் எழுதியுள்ளது.Bhopal Memorial Hospital & Research Centre
பி.எம்.எச்.ஆர்.சி என்பது, போபால் விஷவாயுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்வதற்காகக் கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நடத்தி வருகிறது.
அந்தக் கடிதத்தில், போபால் மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் விஷவாயுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் (கொரோனா தொற்று உள்ள நபர் மற்றும் சந்தேகிக்கும் நபர்) சிகிச்சை இன்றி இறந்து விடுகிறார்கள். மேலும், ஐ.சி.யூ வசதி, நுரையீரல், நரம்பியல், காஸ்ட்ரோ-அறுவை சிகிச்சை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க மறுக்கப்படுகிறார்கள் என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.-போபால் விஷவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டு உயிர் தப்பியவர்கள் குழுதேவையான அளவு மருத்துவ உபகரணங்களோ, ஐ.சி.யூ வார்டுகளோ, நிரந்தர மருத்துவர்களோ போபால் மருத்துவமனையில் இல்லை. நாட்டுக்கே வழிகாட்டும் ஐ.சி.எம்.ஆர், போபாலில் அதைச் செய்யத் தவறிவிட்டது.
கொரோனாவால் போபாலில் இறந்தவர்களில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் விஷவாயுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள்தான். கடந்த ஜூன் மாதம் தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில். இறந்த 60 நபர்களில் 48 நபர்கள் விஷவாயுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த 48 பேரில் மூன்று பேர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிறந்தவர்கள். இந்த ஆய்வு குறித்த அறிக்கையும் ஜூன் மாதமே, மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகானுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
Also Read: போபால் விஷவாயுவில் பிழைத்தவர்கள் கொரோனாவுக்குப் பலியா?
மத்தியப்பிரதேசத்தின் போபாலில் யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் நிறுவனத்தில், கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி, விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் கசிந்த விஷவாயு அப்பகுதியில் பரவியதால் 3,500-க்கும் அதிகமானோர் பலியானார்கள். ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களின் கை, கால்களை இழந்தனர். சம்பவம் நடந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும், இந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகள் குறைபாடுகளுடனும் பிறக்கிறது என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.விஷவாயு தாக்கி இறந்தவர்கள்
இந்த கொடூர விபத்தில் தப்பித்து உயிர் பிழைத்தவர்கள். தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சோகம் நடந்து வருகிறது. கரணம், இந்த விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் இதயப் பிரச்னைகள், நுரையீரல் சமந்தாப்பட்ட பிரச்னை மற்றும் நீரிழிவு நோய்களில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இன்றளவும் போபாலில், விஷவாயுவால் ஏற்பட்ட பாதிப்புகளுடன் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.பாதிக்கப்பட்டவர்கள்
விஷவாயுவால் பாதிப்புடன் இருப்பவர்களை கொரோனா தாக்கும்போது, மோசமான நிலை ஏற்படுவதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவமனை அலட்சியமாகச் செயல்படுவதாகவும் கூறி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது, மாநில சுகாதார செயலாளர் நீதிமன்றத்தில் அடுத்த மாதம் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.
http://dlvr.it/RgxYrC
Saturday 19 September 2020
Home »
» `விஷவாயுவிலிருந்து மீண்டவர்களைத் தாக்கும் கொரோனா; இறப்பவர்களில் 60%!’ - போபால் சர்ச்சை