சென்னை அணியில் பிராவோ இன்னும் சில போட்டிகளில் இடம்பெறமாட்டார் என அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் ஐபிஎல் நேற்று தொடங்கியது. மைதானத்தில் ரசிகர்கள் இல்லை என்றாலும் முதல் ஐபிஎல் போட்டி பரபரப்பாகவே இருந்தது. சென்னை - மும்பை அணிகள் மோதிய நேற்றைய போட்டியில் சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என சென்னை அணி தரமான விளையாட்டை வெளிப்படுத்தியது. சென்னை அணியில் ஆல்ரவுண்டர் பிராவோ இடம் பெறவில்லை. இது குறித்து பேசிய அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங், சென்னை அணியில் பிராவோ இன்னும் சில போட்டிகளில் இடம்பெறமாட்டார் என தெரிவித்துள்ளார். முட்டியில் காயம் ஏற்பட்டு தற்போது அவர் மீண்டுள்ள நிலையில் சில போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என தெரிவித்துள்ளார். பிராவோ இடத்தை நிரப்பிய ஷாம் கரன் நேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் தொடர்ந்து இடம்பெறுவார். ஷாம் கரன் குறித்து பேசிய ஸ்டீபன் ஃபிளமிங், ஷாம் கரனின் ஆட்டம் வெறித்தனமாக இருந்ததாக தெரிவித்தார்
http://dlvr.it/Rh09KH
Sunday 20 September 2020
Home »
» பிராவோ இன்னும் சில போட்டிகளில் இடம்பெறமாட்டார் - ஸ்டீபன் ஃபிளமிங்