சமூக ஆர்வலரும், ஆர்ய சமாஜ் தலைவருமான சுவாமி அக்னிவேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80 சுவாமி அக்னிவேஷ் சில மாதங்களாக கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை மோசமான நிலையில் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மாலை 6.30 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுவாமி அக்னிவேஷ் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியவர் என்றும், கொத்தடிமை முறைக்கு எதிராக தனது வலுவான குரலை பதிவு செய்தவர் எனவும் பலரும் அவரது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
http://dlvr.it/RgQqCq
Friday, 11 September 2020
Home »
» உடல்நலக்குறைவால் காலமானார் சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ்.!
உடல்நலக்குறைவால் காலமானார் சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ்.!
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!