பாலிவுட்டில் தலைவிரித்தாடும் போதை பொருட்கள் பயன்பாடு குறித்து அண்மையில் சர்ச்சை கருத்தை சொல்லியிருந்தார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். மகாராஷ்டிரா மாநில அரசியலில் கங்கனாவின் கருத்து அதிர்வலைகளை எழுப்பிய நிலையில் ‘போதை பொருள் விவகாரத்தில் முதலில் உங்கள் சொந்த மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தின் நிலையை பாருங்கள்’ என நடிகை கங்கனாவுடன் மல்லுக்கு நிற்கிறார் நடிகை ஊர்மிளா. பாலிவுட் நடிகையான அவர் நடிகர் கமலின் இந்தியன் படத்தில் நடித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டியளித்தபோது இதனை சொல்லியுள்ளார். “போதை பொருள் பயன்பாடு தொடர்பான அச்சுறுத்தல் தேசம் முழுவதுமே எழுந்துள்ளது. ஹிமாச்சல பிரேதசம் தான் போதை பொருட்களின் தாய் வீடு என்பது அவருக்கு தெரியுமா என தெரியவில்லை. மற்ற மாநிலங்களை குறை சொல்வதற்கு முன்னர்,முதல் அவரது சொந்த மாநிலத்திலிருந்து அந்த பணியினை ஆரம்பிக்கலாம். சத்தமாக பேசுவதால் ஒரு நபர் உண்மையை தான் பேசுகிறார் என நம்ப வேண்டிய அவசியமில்லை. அனைவரது கவனத்தையும் ஈர்க்க வேண்டுமென விரும்புகின்ற ஒருவர் தான் இப்படி நடந்து கொள்வார்” என அவர் தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/RgnL7B
Thursday 17 September 2020
Home »
» நடிகை கங்கனா ரனாவத்துடன் மல்லுக்கு நிற்கும் நடிகை ஊர்மிளா