இந்தியாவில் முதன் முதலாக கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்ட மாநிலம் கேரளா. சீனாவில் இருந்து வந்த மூன்று மாணவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் கண்டறியப்பட்டது. எற்கெனவே நிபா வைரஸ் தொற்று உள்ளிட்டவைகளால் அனுபவம் கொண்ட கேரளா, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. இதனால், ஆரம்பத்தில் இருந்தே கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க முயற்சித்தது. இந்தநிலையில் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றுவந்த முதியவர் உடலில் புழுக்கள் ஏற்பட்ட விவகாரம் பிரச்னையை ஏற்படுத்தியது. அது சம்பந்தமாக மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவத்தால், பிற மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்ததனர். அரசு பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா
இதற்கிடையில் மருத்துவப் படிப்பு முடித்து வெளியே வந்த சுமார் 900 மருத்துவர்கள் கொரோனா நோய்த்தடுப்பு பணிக்காக தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு 45,000 ரூபாய் மாதச் சம்பளம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட நிலையில் 27,000 ரூபாய் மாதச்சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சுமார் 900 மருத்துவர்களும் தங்கள் தற்காலிகப் பணியை உதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read: கேரளா: பிரியாணி விற்ற திருநங்கைக்கு நேர்ந்த கொடுமை! - உதவிக்கரம் நீட்டிய நல்லுள்ளங்கள்
இந்தநிலையில்தான் நீண்டகாலமாக பணிக்குச் செல்லாமல் இருந்த 380 மருத்துவர்களை பணி நீக்கம் செய்து கேரள சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ``எந்தக் காரணமும் கூறாமல் சில வருடங்களாக பணிக்கு வராமல் உள்ள சுகாதாரத்துறையின் கீழ் பணிபுரியும் 385 டாக்டர்கள் உள்பட 432 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பலமுறை வாய்ப்பு அளித்தும் பணியில் சேராத ஊழியர்களை நீக்க ஏற்கெனவே அரசு முடிவு செய்திருந்தது.கொரோனா வைரஸ்
கொரோனா காலத்தில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் சேவை அவசியமாக இருந்தது. அதனால்தான் பணிக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கஒ எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காரணமே இல்லாமல் பணிக்கு வராமல் இருந்த மருத்துவக் கல்வி சார்ந்த மருத்துவர்கள் 36 பேர் ஏற்கெனவே பணி நீக்கம் செய்யப்படிருந்தனர். இப்போது 385 மருத்துவர்கள் மட்டுமல்லாது 5 ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள், 4 மருந்தாளுநர்கள், 20 ஸ்டாப் நர்ஸ் உள்ளிட்டவர்கள் என மொத்தம் 432 பேர் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/RjpQhc
Sunday 18 October 2020
Home »
» கொரோனா காலத்திலும் பணிக்கு வராத 385 டாக்டர்கள் பணிநீக்கம்! - கேரள அரசு அதிரடி