ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களை குவித்தது. பின்னர் பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்களான வாட்ஸன் மற்றும் டு பிளசிஸ் ஆகியோர் பஞ்சாப் அணிக்கு தண்ணி காட்டினர். விக்கெட் இப்போது விழும், அப்போது விழும் என காத்திருந்த பஞ்சாப் வீரர்களுக்கு கடைசி வரையிலும் ஏமாற்றமே மிஞ்சியது. இத்தனை போட்டிகளாக ஜொலிக்காத வாட்ஸன், இன்று அத்தனைக்கும் சேர்த்துவைத்து பஞ்சாப் பந்தை வெளுத்துவிட்டார். இருவரது காட்டுத்தனமான அடியை தாங்கமுடியாத பஞ்சாப் அணி 17.4 ஓவர்களில் சரண்டர் ஆனது. ஒரு விக்கெட்டைகூட இழக்காத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. சென்னை பேட்டிங்கில் தொடக்க வீரர்களே அனைத்தையும் செய்துமுடித்தனர். வாட்ஸன் மற்றும் டுபிளசிஸ் இருவரும் தாங்கள் எப்படிப்பட்ட ஜாம்பவான்கள் என்பதை நிரூபித்துக்காட்டியிருந்தனர். 53 பந்துகளில் வாட்ஸன் 83 ரன்களை குவித்திருந்தார். இதில் 3 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கும். He predicted✅He executed✅He proved himself right✅? @ShaneRWatson33 | @ChennaiIPL | #Dream11IPL pic.twitter.com/QQvxPNVVRY — IndianPremierLeague (@IPL) October 4, 2020 கடந்த போட்டிகளில் பல விமர்சனங்களுக்கு உள்ளான வாட்சன், தன் பேட் மூலமாக நேற்றைய போட்டியில் பதிலளித்தார். குறிப்பாக அக்டோபர் 3ம் தேதி அவர் பதிவிட்ட ட்வீட், தற்போது வைரலாகி வருகிறது. 'ஐபிஎல்.லின் சிறந்த போட்டி வந்துகொண்டிருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார். அவர் கூறியது போலவே, நேற்று சிறந்த ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்தளித்தார். வாட்சனின் கணிப்பை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள ஐபிஎல், "அவர் கணித்தார். அவர் செயல்பட்டார். அவர் சரியென நிரூபித்துவிட்டார்" எனப் பாராட்டியுள்ளது.
http://dlvr.it/RhyMyb
Monday 5 October 2020
Home »
» சொல்லி அடிச்ச கில்லி - வைரலாகும் வாட்சனின் ட்வீட்!