உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் விலை மதிப்புள்ள பொருட்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆடம்பரமான கார்கள், ஷூக்கள், கைக்கடிகாரங்கள் எனப் பட்டியல் நீளமானது. அந்த வரிசையில், பிரெஞ்சு ஓப்பன் போட்டியில் விளையாடும் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் அணிந்திருக்கும் புதிய கைக்கடிகாரத்தின் விலை 7.69 கோடி ரூபாய் எனத் தெரியவந்துள்ளது. அந்த கைக்கடிகாரத்தின் எடை 30 கிராம்தான். ஆனால் விலையோ 1,050,000 டாலர்கள். இந்திய மதிப்பில் ரூ.7.69 கோடி. இந்த வகை கடிகாரங்கள் 50 மட்டுமே தயாரிக்கப்பட்ட லிமிடெட் எடிசன். அவரது கடிகாரம் தண்ணீரில் மிதக்கக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும், இந்த வடிவமைப்பு நடாலின் மணிக்கட்டில் வாழ்க்கையின் நம்பமுடியாத சக்திகளைத் தாங்கிக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது ஆடம்பர கைக்கடிகாரங்களுக்காக ரஃபேல் நடால், சுவிஸ் பிராண்ட் ரிச்சர்ட்டு மல்லேயுடன் கூட்டு சேர்ந்திருந்தார். நடாலின் புதிய கைக்கடிகாரம் தொடர்பாக ஒரு விவாதமே சமூக வலைதளங்களில் நடந்துவருகிறது. அவரது ரசிகர்கள் வாழ்த்துகளுடன் பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்துவருகின்றனர். Richard Mille debuts new RM 27-04 Tourbillon Rafael Nadal - the fifth tourbillon watch developed in collaboration with Rafa, a limited edition to 50 pieces#RichardMille #Rafa #RafaNadal #RM2704 #tourbillon #ultraluxury #luxurywatch #LimitedEdition @Richard_Mille pic.twitter.com/YRgUpzItzn — CPP-LUXURY.COM (@cppluxury) September 24, 2020 வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த முட்டை விலை..!
http://dlvr.it/Rhs27F
Saturday 3 October 2020
Home »
» டென்னிஸ் வீரர் ரஃபேல் நாடலின் ஆடம்பர கைக்கடிகாரம்: விலை என்ன தெரியுமா?