பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட ரூ.36 லட்சம் உயர்ந்திருப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் தொடர்பான சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூ.2.49 கோடியாக இருந்தது என்றும், தற்போது அது ரூ.2.85 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இது ரூ.36 லட்சம் உயர்வு என்று கூறப்பட்டுள்ளது. இதில் ரூ.3.3 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும், ரூ.33 லட்சம் பாதுகாப்பான முதலீடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரதமர் மோடியின் கையிருப்பில் ரூ.31,450 இருப்பதாகவும், இதுதவிர குஜராத் காந்திநகர் எஸ்.பி.ஐ வங்கிக்கணக்கில் ரூ.3,38,173 லட்சம் இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அத்துடன் ரூ.1.6 கோடிக்கு நிரந்த வைப்பு தொகை மற்றும் பாதுகாப்புத்துறையில் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய பாதுகாப்பு சான்றிதழ்களாக ரூ.8.43 லட்சமும், ஆயுள் காப்பீடு திட்டத்தில் ரூ.1,50 லட்சம் இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. அசையும் சொத்துக்கள் ரூ.1.75 கோடிக்கும், அசையா சொத்துக்கள் ரூ.1.10 கோடிக்கும் இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த சொத்துக்களில் மோடியின் குடும்பத்தினருக்கு பங்கு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதேசமயம் மோடியில் பெயரில் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்பதும், தனிப்பட்ட வகையில் அவர் வங்கியில் எந்த கடனும் பெறவில்லை என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொத்துமதிப்பு கடந்த ஆண்டு ரூ.32.3 கோடியாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் ரூ.28.63 கோடியாக சரிவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமித்தாவின் பரம்பரை சொத்து ரூ.13.56 கோடி எனவும், அவை அசையா சொத்துகளும் எனவும் கூறப்பட்டுள்ளது. அமித் ஷாவின் கையிருப்பில் ரூ.15,814 மட்டுமே பணம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கிக்கணக்கு மற்றும் காப்பீடு திட்டத்தில் ரூ.1.04 கோடியும், ஓய்வூதியத்தில் ரூ.13.47 லட்சமும் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகையாக ரூ.44.47 லட்சம் மதிப்பிற்கு அமித் ஷாவின் சொத்துக்கள் உள்ளன.
http://dlvr.it/RjgdVw
Friday 16 October 2020
Home »
» கடந்த ஆண்டைவிட உயர்ந்த மோடியின் சொத்து : சரிந்த அமித் ஷா சொத்து..!