உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் தரவுகளின்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி வரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (National security act - NSA) கீழ் மாநிலத்தில் 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில், 76 வழக்குகள் பசுவதை தடுப்புச் சட்டத்தின் (1955) அடிப்படையில் பதிவாகியிருக்கின்றன.
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகக் காவல்துறை ஆதாரங்களை சேகரிக்கத் தவறியதால், 32 வழக்குகளைத் தள்ளுபடி செய்து அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக உ.பி அரசின் தரவுகள் சொல்கின்றன.பசுக்கள்
இந்தநிலையில், கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லியில் (shamli) மாட்டிறைச்சி விற்பனை செய்ததாக ரஹ்முதீன் என்பவர் பசுவதை தடுப்புச் சட்டத்தின் 3, 5 மற்றும் 8 ஆகிய உட்பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டார். ரஹ்முதீனின் ஜாமீன் மனு அலகாபாத் நீதிமன்ற நீதிபதி சித்தார்த் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின்போது, நீதிபதி சித்தார்த், `பசுவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகும் இது போன்ற வழக்குகளில், காவல்துறை சமர்ப்பிக்கும் ஆதாரங்களில் நம்பகத்தன்மை இல்லை. இந்தச் சட்டம் அப்பாவி மக்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது’ என்று கருத்து தெரிவித்தார்.
`பறிமுதல் செய்யப்படும் இறைச்சிகள் தடயவியல் ஆய்வகத்துக்குச் சோதனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பே, அது மாட்டிறைச்சி என்ற முடிவுக்கு போலீஸார் வருகிறார்கள். பல நேரங்களில் கைப்பற்றப்பட்ட இறைச்சிகளை பரிசோதனைக்கு அனுப்புவதே இல்லை. இந்தச் சட்டத்தால் அப்பாவி பொதுமக்கள் பலர் தண்டிக்கப்படுகிறார்கள்’ என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.
Also Read: ராஜஸ்தானில் பசுவதை செய்வோர் கொல்லப்படுவார்கள் - பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு
ரஹ்முதீனின் வழக்கறிஞர், `காவல்துறையினர் ரஹ்முதீனை சம்பவ இடத்தில் கைது செய்யவில்லை’ என்று வாதாடினார். இதையடுத்து, எந்தக் குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் ரஹ்முதீன் ஒரு மாத காலம் சிறையில் இருந்ததாகத் தெரிவித்த நீதிமன்றம், பசுக்கள் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு செய்து அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றன என்றும், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன; இதனால் மட்டுமே பசுக்களின் இறப்புகள் அதிகரித்திருக்கின்றன என்றும் தெரிவித்திருக்கிறது.
http://dlvr.it/RkSMpT
Wednesday 28 October 2020
Home »
» `பசுவதை தடுப்புச் சட்டம் அப்பாவிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது!’- அலகாபாத் உயர் நீதிமன்றம்