"போலீஸில் புகாரளித்தால், வீடியோவை வைரலாக்கிவிடுவேன்" பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் மிரட்டியதால், 22 வயதான நேபாள பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமையை போலீஸில் புகாரளிக்க உத்திர பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து 800 கி.மீ தூரம் காரில் பயணம் செய்து மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கோரடி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதுடன், கொடூரமாக தாக்கப்பட்டார். மருத்துவமனையில் உயிரிழந்த அவரின் உடலை காவல்துறை அதிகாரிகள் இரவோடு இரவாக தகனம் செய்தது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலியல் வன்கொடுமை
இந்த நிலையில், கடந்த 2018 -ம் ஆண்டு, இந்தியாவில் பணிபுரிய வந்த நேபாளத்தை சேர்ந்த பெண் ஒருவர் உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் பைசாபாத் சாலையில் உள்ள குடியிருப்பில் பெண் நண்பர் ஒருவருடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.
நேபாள பெண்ணுடன் குடியிருப்பில் தங்கியிருந்த பெண், துபாயில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தன் நண்பரான லக்னோவைச் சேர்ந்த பிரவீன் ராஜ்பால் யாதவ் என்பவரை நேபாள பெண்ணுக்கு வீடியோ கால் மூலம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.பாலியல் தொல்லை
சில நாட்களுக்கு பிறகு, தன்னுடன் தங்கியிருக்கும் பெண்ணிடம் கொடுத்து வைத்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை நேபாளப் பெண் திரும்பி கேட்கும் போது இருவருக்கும் மோதல் முற்றியதாக கூறப்படுகிறது. நேபாளத்தை சேர்ந்த பெண் இதுகுறித்து துபாயில் உள்ள பிரவீன் யாதவிடம் தெரிவிக்க, அதற்கு பிரவீன் லக்னோவில் உள்ள தனியார் ஹோட்டலில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து கொடுத்து நேபாள பெண்ணை அங்கு தங்கி கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு பின் துபாயில் இருந்து லக்னோவிற்கு வந்த பிரவீன் யாதவ், தனியார் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த நேபாள பெண்ணை சந்தித்து, அந்த பெண்ணுக்கு போதைப் பொருள் கொடுத்து, மயக்கமடைந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
Also Read: ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்தினர் கோரிக்கை என்ன? - 5 விஷயங்களைப் பட்டியலிட்ட பிரியங்கா காந்தி
பிரவீன் யாதவ் இளம் பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததோடு, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவு செய்துள்ளார். அதைத்தொடர்ந்து, அந்த பெண்ணை லக்னோவில் உள்ள தன் நண்பரின் இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு மீண்டும் போதை வஸ்துக்களை கொடுத்து அந்த பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர், இந்த சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளித்தாலோ, தான் சொல்வதை கேட்காவிட்டாலோ, வீடியோ அனைத்தையும் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்று நேபாள பெண்ணை மிரட்டியுள்ளார்.பாலியல் வன்கொடுமை
இதையடுத்து, உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து காரில் 800 கி.மீ. தூரம் பயணம் செய்து தப்பித்து வந்த அந்த பெண், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள நேபாளத்தை சேர்ந்த நண்பரின் வீட்டிற்கு கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வந்துள்ளார். பின் இருவரும் சேர்ந்து நாக்பூர் கோரடி காவல் நிலையத்தில் பிரவீன் யாதவ் மற்றும் அவரின் பெண் நண்பர் இருவர் மீதும் பண மோசடி செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நாக்பூர் போலீஸார் சனிக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர். கோரடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் வசிக்கும் லக்னோவில் இந்த சம்பவம் நடந்ததால், அது இப்போது உத்தரப்பிரதேச போலீஸாருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நகர காவல்துறை ஆணையர் அமிதேஷ்குமார் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து கோரடி காவல் நிலைய மூத்த ஆய்வாளர் வஜீர் ஷேக் கூறுகையில், "அந்த பெண் ஆரம்பத்தில் லக்னோவில் புகார் பதிவு செய்ய விரும்பினார், ஆனால் யாதவ் அவருடன் ஒரு கான்ஸ்டபிளைக் அழைத்து வந்து, இந்த விஷயத்தை பேசி தீர்த்துக் கொள்ளவும், குற்றம் சாட்டப்பட்டவருடன் சமரசம் செய்யவும் கேட்டார். அதன் பிறகு உ.பி. போலீஸ் மீதான நம்பிக்கையை இழந்த நேபாள பெண், கோரடியில் உள்ள மஹாதுலாவிற்கு வந்துள்ளார், அங்கு அவரது நேபாள நண்பர் ஒருவர் உள்ள நிலையில் அவர்களிடம் உதவியை நாடியுள்ளார்.
அவர் எங்களிடம் வந்த பிறகு, நாங்கள் அவருடன் பேச இரண்டு பெண் அதிகாரிகளை அழைத்தோம். தனது புகாரைப் பதிவு செய்வதற்கு முன்பே அந்த பெண் நிம்மதியாக உணர்ந்தார்” என்று கூறினார். பாலியல் வன்கொடுமை
மேலும், `நாங்கள் இப்போது இந்த வழக்கை லக்னோவின் சின்ஹாட் காவல் நிலையத்திற்கு அனுப்பியுள்ளோம். எங்கள் காவல்துறை அதிகாரிகளையும், பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணையும் அனுப்பியுள்ளோம். மேலும் சின்ஹாட் காவல் நிலையத்தின் பொறுப்பாளரிடம் இதுகுறித்து பேசிவிட்டோம்" என்றார்.
முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்.ஐ.ஆர் (FIR) எந்தவொரு காவல் நிலையத்திலும் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் அது தகுதியான அதிகார வரம்பைக் கொண்ட, பொருத்தமான காவல் நிலையத்திற்கு மாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: `நான்கு மாதங்களாகத் துன்புறுத்தப்பட்ட இளம்பெண்!’ - ஹத்ராஸ் சம்பவத்தில் நடந்தது என்ன?
http://dlvr.it/RhzyW5
Monday 5 October 2020
Home »
» லக்னோவில் பாலியல் வன்கொடுமை; புகாரளிக்க 800 கி.மீ. பயணம்! - உ.பி.யில் பாதிக்கப்பட்ட நேபாள பெண்