கர்நாடக ஆளும் கட்சியான பா.ஜ.க-வில் உள்கட்சிப் பூசல்கள் அதிகரித்து வருவதாகவும், முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக கர்நாடக வடக்குப் பகுதி எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் அம்மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. முன்னதாக, எட்டு முறை எம்.எல்.ஏ-வும் பா.ஜ.க மூத்த தலைவாருமான உமேஷ் கட்டி, எடியூரப்பா அமைச்சரவையில் தாம் அமைச்சராகப் பதவியேற்க விரும்பவில்லை என்று கூறியிருந்தார். அதற்குப் பதிலாக வடக்கு கர்நாடகாவின் பிரதிநிதியாகத் தாம் மாநில முதலமைச்சராக விரும்புவதாகவும் கூறியிருந்தார். பசனகௌடா யட்னல்
இந்த ஆண்டு தொடக்கத்தில் உமேஷ் கட்டி, பசனகௌடா, முருகேஷ் நிரானி, ரமேஷ் கட்டி, சி.பி.யோகிஷ்வர், ராஜூ கௌடா உள்ளிட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் எடியூரப்பாவுக்கு எதிராக ரகசிய இடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருந்தனர். இந்த விவகாரம் பா.ஜ.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
Also Read: கர்நாடகா: `இனி நோ லாக்டௌன்; 5டி முறை மட்டுமே’ - முதல்வர் எடியூரப்பா
இந்தநிலையில், விஜயபுரா தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏவான பசனகௌடா பேச்சு அம்மாநில பா.ஜ.க-வில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஜயபுராவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பசனகௌடா, ``முதல்வராக எடியூரப்பாவின் செயல்பாடுகளால் பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களும் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். இதனால், எடியூரப்பா முதல்வர் பதவியில் நீண்டநாள்கள் நீடிக்க மாட்டார். விரைவில் அவர் மாற்றப்படுவார். அடுத்த முதல்வர் வடக்கு கர்நாடகாவைச் சேர்ந்தவராகவே இருப்பார் என பிரதமர் மோடியும் கூறிவிட்டார்.
CM to be changed soon as most of senior leaders in state are not happy with BS Yediyurappa. PM Modi also said that next CM will be from North Karnataka. Yediyurappa became CM because of us, North Karnataka ppl gave 100 MLAs which made him CM:BJP MLA Basangouda P Yatnal. (19.10) pic.twitter.com/88DK1SYq5j— ANI (@ANI) October 20, 2020
வடக்கு கர்நாடகவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 100 எம்.எல்.ஏ-க்களாலேயே எடியூரப்பா முதல்வராக இருந்து வருகிறார். மாண்டியா உள்ளிட்ட தெற்கு கர்நாடக மாவட்டங்களால் அவர் முதல்வர் பதவியில் இருக்கவில்லை’’ என்று பசனகௌடா பேசியிருக்கிறார்.
http://dlvr.it/Rjz672
Tuesday 20 October 2020
Home »
» `எடியூரப்பா நீண்டநாள் முதல்வராக இருக்கமாட்டார்!’- உள்கட்சிப் பூசலால் தள்ளாடும் கர்நாடக பா.ஜ.க