சிஎஸ்கே வீரர் ஜடேஜா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு போஸ்டரை பதிவிட்டுள்ளார். எப்போதும் இல்லாத அளவிற்கு நடப்பு ஐபிஎல் சீசனில் பத்து ஆட்டங்கள் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் மூன்று ஆட்டங்களில் தான் வென்றுள்ளது. ஐபிஎல் என்றாலே அதில் தோனி தலைமையிலான சென்னை அணியின் ஆதிக்கம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். ஆனால் இந்த முறை அது எல்லாம் மொத்தமாக மிஸ் ஆகியுள்ளது. வீரர்களின் தேர்வு சொதப்பல், ரெய்னா - ஹர்பஜனுக்கு மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்யாதது போன்ற பல காரணங்கள் சிஎஸ்கேவின் தோல்விக்கு காரணமாக சொல்லப்படுகிறது. தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது சென்னை. மற்ற அணிகள் சென்னைக்கு சாதகமாக தோல்வியை சந்தித்து புள்ளியில் வீழ்ந்து சென்னையும் அடுத்த எல்லா போட்டிகளிலும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்புள்ளது சென்னைக்கு. இந்நிலையில் சிஎஸ்கே வீரர் ஜடேஜா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு போஸ்டரை பதிவிட்டுள்ளார். அதில் நம்மால் வெற்றி பெற முடியும். நாம் வெற்றி பெற வேண்டும். நாம் வெற்றி பெறுவோம் என (We can win, we must win, we will win) எனக்குறிப்பிட்டுள்ளார்.
http://dlvr.it/Rk6gnY
Thursday 22 October 2020
Home »
» ''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.!