சுடுதண்ணீர் கையில் பட்டாலே எரிச்சல்தாங்காது. கொப்பளித்துவிடும். ஆனால் ஒரு பெண் கொதிக்கும் எண்ணெயில் பொரிக்கும் உணவுகளை வெறும் கைகளால் அசால்ட்டாக எடுக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? ஆம் அசாதரணமான அந்தப் பெண்ணின் வீடியோதான் இணையத்தில் வைரலாகிவருகிறது. டிக்டாக்கில் வைரலான வீடியோ, ஃபர்ஸ்ட் வி ஃபீஸ்ட் என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. ’’தோற்பவர்களுக்குத்தான் இடுக்கித் தேவை என்கிறார் அவர்’’ என்று தலைப்பிடப்பட்ட இந்த வீடியோவை 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்து வியந்துவருகின்றனர். She said tongs are for losers ??? pic.twitter.com/QF4IaFiMd7 — First We Feast (@firstwefeast) October 26, 2020 வெறும் 13 நொடிகள் மட்டுமே வரும் இந்த வீடியோவில் ஒரு பெண் கொதிக்கும் பெரிய எண்ணெய்ச்சட்டி முன்பு நின்றுகொண்டு வெறும் விரல்களால் பொரித்த உணவுகளை எடுக்கிறார். ஆனால் அவர் கைகளுக்கு ஒன்றும் ஆகவில்லை.
http://dlvr.it/RkNbrp
Tuesday 27 October 2020
Home »
» கொதிக்கும் எண்ணெய்யில் அசால்ட்டாக கைவிடும் பெண்: நெட்டிசன்களை மிரள வைத்த வீடியோ!