பேட்டில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயருக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி, கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயில் 45 பந்துகளில் 53 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த கிறிஸ் கெயில் தனது பேட்டில் பொறிக்கப்பட்டிருக்கும் "தி பாஸ்" என்ற வார்த்தையை சுட்டிக்காட்டினார். போட்டி முடிந்த பின்பு பேசிய கிறிஸ் கெயில் "ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. ஆனால் இரண்டாவதாக விளையாடியபோது கொஞ்சம் பரவாயில்லை. என்னை மூன்றாவது வீரராக களமிறங்கச் சொன்னார்கள். அதுதான் எனக்கு கொடுத்த பணி. தொடக்க வீரர்களாக அகர்வாலும் ராகுலும் மிகவும் சிறப்பாகவே விளையாடினார்கள். பின்பு எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நான் சிறப்பாக செய்து முடித்தேன்" என்றார். மேலும் "நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். பேட்டில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயருக்கு மரியாதை கொடுங்கள். கிரிக்கெட் விளையாடுவதற்கு உடல்தகுதி மிகவும் முக்கியம். எனக்கு பெவிலியனில் விளையாடாமல் அமர்ந்திருப்பது பிடிக்காது. உடற்தகுதி சரி இல்லை என்றாலும் விளையாடுவதுதான் எனக்கு மகிழ்ச்சியை தரும். விரைவில் முழு உடற் தகுதியை பெறுவேன்" என்றார் கெயில்.
http://dlvr.it/Rjjqny
Friday 16 October 2020
Home »
» "பெயருக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள்" கிறிஸ் கெயில் !