முகநூலில், குறிப்பிட்ட ஒரு சாதியை இழிவுபடுத்தும் விதமாக பதிவுகளைப் பகிர்ந்த காரணத்திற்காக தேவ்ஜி மகேஸ்வரி எனும் பட்டியல் வகுப்பை சார்ந்த வழக்கறிஞரை, வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தைச் சேர்ந்தவர், தேவ்ஜி மகேஸ்வரி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர் அகில இந்திய பிற்படுத்ப்பட்டோா் மற்றும் தலித் கூட்டமைப்பின் வழக்கறிஞராக செயல்பட்டு வந்தாா். தனது முகநூல் பக்கத்தில் அவ்வப்போது குறிப்பிட்ட ஒரு சாதியினரை இழிவுபடுத்தும் விதமாக கருத்துக்களைப் பதிவேற்றி வந்துள்ளாா்.
இந்த நிலையில் ரப்பர் பகுதியைச் சேர்ந்த 22 வயது வாலிபரான பரத் ராவல் என்பவர், தேவ்ஜி பதிவேற்றும் பதிவுகள் குறித்து தொடர்ந்து முகநூலிலும், தொலைபேசியின் வாயிலாகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளாா். ஒருகட்டத்தில் மிகுந்த கோபமடைந்த பரத் ராவல், கடந்த ஜூலை மாதம் தேவ்ஜி மகேஸ்வரியை தொலைபேசியில் அழைத்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். அன்று நிகழ்ந்த அழைப்பில் இருவருக்கும் இடையேயான வாக்குவாதமானது கடுமையான சொற்களால் நெடுநேரம் நீண்டுள்ளது. இறுதியில், ராவத் இத்தோடு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ளுமாறு எச்சரித்துள்ளாா்.
ஆனால், தேவ்ஜி மேலும் பதிவிடுவதை தொடர ஆத்திரமடைந்த ராவத் கடந்த செப்டம்பர் மாதம் 25-ம் தேதி, தேவ்ஜியை அவர் அலுவலகத்தில் வைத்தே கொலை செய்துள்ளனா்.தேவ்ஜி மகேஸ்வரி
கொலை சம்பவத்தையடுத்து, தேவ்ஜியின் மனைவி மினாக்ஸிபென் போலீஸாாிடம் அளித்த புகாாின் அடிப்படையில் படான் மாவட்ட டி.ஐ.ஜி. மோத்தலியா தலைமயில் அமைந்த சிறப்பு விசாரணை குழு ராவத்தையும் அவரது நண்பர்கள் எட்டு பேரையும் கைது செய்து நடத்திய விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக டி.ஐ.ஜி. மோத்தலியா பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில், `தற்போது கிடைக்கப்பெற்ற ஆதரங்களின் அடிப்படையில், இருவரும் தொலைபேசியின் வாயிலாக 13-14 நிமிடங்கள் வரை சர்ச்சைக்குறிய பதிவுகள் குறித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். மேலும் ராவத், பலமுறை இச்செயலை நிறுத்தக்கோாி தேவ்ஜியை எச்சரித்து மிரட்டல்விடுத்து வந்துள்ளதாா்.
பரத் ராவத்திடம் மேற்கொண்ட விசாரணையிலும், தேவ்ஜியின் முகநூல் பதிவுகளின் மூலமும் கொலை நிகழ்ந்ததற்கு சர்ச்சைக்குரிய அப்பதிவுகளே காரணமாக இருக்கிறது.
கொலை செய்த ராவத், அவரது நண்பர்களான பிரகாஷ் பீரா, ராஜேஷ் அலியாஸ், விக்ரம் தேவ்தா உள்ளிட்டோாின் உதவியேடு மும்பைக்குத் தப்பிச் சென்றுள்ளாா். ஆனால், மும்பை போலீஸாா் ஓரிரு நாட்களிலேயே அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.தேவ்ஜியின் மனைவி மினாக்ஸிபென் அளித்த புகாரில், "என் கணவர் ரப்பர் நகரில் உள்ள சமாஜ்வாதி சமூக மண்டபம் தொடர்பான சா்ச்சைக்குரிய வழக்கொன்றை எடுத்து நடத்தத் தொடங்கினாா். அப்போதிலிருந்தே, இது போன்ற மிரட்டல்களை பரத் ராவத் விடுத்து வந்தார்" என்று கூறியுள்ளாா்.
மினாக்ஸியின் புகாா் அடிப்படையில், ராவத் மற்றும் அவரது நண்பர்களுக்கு எதிரான ஆதாரங்கள் இன்னும் சரிவர கிடைக்காததால், மேலும் விசாரணை நிகழ்ந்து வருகிறது.
http://dlvr.it/RjsvH6
Monday 19 October 2020
Home »
» குஜராத்: குறிப்பிட்ட சாதிக்கு எதிராக வெறுப்பு பதிவு?! - பட்டியலின வழக்கறிஞர் கொலை