நடப்பு ஐபிஎல் சீசனில் 12 ஆட்டங்கள் விளையாடி நான்கு வெற்றிகளை பெற்றுள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக லீக் சுற்றோடு வெளியேறுகிறது சென்னை. இந்நிலையில் சென்னையை மீட்டுருவாக்கம் செய்வது எப்படி என்பதை தோனி நன்கு அறிவார் என சொல்லியுள்ளார் முன்னாள் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அஞ்சூம் சோப்ரா. “சென்னை மாதிரியான சாம்பியன் அணிகளும் சறுக்கல்களை சந்திக்கும். அடுத்த ஐபிஎல் சீசனில் அதனை சரி செய்வது எப்படி என்பது மேட்ச் வின்னர் தோனிக்கு தெரியும். சீனியர் வீரர்களின் திடீர் விலகல் மற்றும் காயம் மாதிரியான சிக்கல்களை சென்னை எதிர்கொண்ட போது சென்னை பிளான் C-யை கையில் எடுத்திருக்க வேண்டும். எனக்கு தெரிந்து தோனி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சென்னை அணியுடன் இருக்க வாய்ப்புகள் உள்ளன. அணியின் கூட்டு முயற்சிக்கு பலன் கிடைக்காததால் தான் இந்த சீசனில் சென்னையால் சோபிக்க முடியவில்லை. அதனால் அணியின் தலைவன் மீது பழிபோட்டு விட முடியாது” என தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/RkYG4V
Thursday 29 October 2020
Home »
» ‘சிஎஸ்கே-வை மீட்டுருவாக்கம் செய்வது எப்படி என்பதை தோனி அறிவார்’ அஞ்சூம் சோப்ரா