நடப்பு ஐபிஎல் சீசனின் முதற்பாதி ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 1 முதல் 6 வரையிலான பவர்பிளே ஓவர்களில் அதிக டாட் பால்கள் ஆடிய அணி எது என்பதை பார்ப்போம். 36 பந்துகளில் சுமார் 52.1 சதவிகித பந்துகளை டாட் பாலாக விளையாடி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது சென்னை அணி. தொடர்ந்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் உள்ளன.இதில் பஞ்சாப் அணி பவர் பிளே ஓவர்களில் 41.4 சதவிகிதம் மட்டுமே டாட் பால்கள் ஆடியுள்ளன. ராஜஸ்தான் அணியின் ஆர்ச்சர் அதிகபட்சமாக 117 டாட் பால்களை வீசி அதிக டாட் பால்கள் வீசிய பவுலர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
http://dlvr.it/RjxZvd
Tuesday 20 October 2020
Home »
» அடேங்கப்பா இத்தனை டாட் பால்... பவர்பிளேயில் ஒட்டுமொத்தமாக தடுமாறிய சிஎஸ்கே