சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் சூரியின் அப்பாவாக தவசியின் 'கருப்பன் குசும்புக்காரன்' காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம். 'கருப்பன் குசும்புக்காரன்' மீம்கள் மூலம் வைரலான அவரது முகம் தற்போது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீப காலமாக உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து காணப்பட்ட தவசி, உதவி வேண்டி வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சரவணனின் ’சரவணா’ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அவருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என திமுக எம்.எல்.ஏ சரவணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நடிகர் சவுந்தரராஜா ரூ. 10ஆயிரமும் நிதியுதவி செய்துள்ளார். ஏற்கெனவே நடிகர் தவசிக்கு சிவகார்த்திகேயன் ரூ25 ஆயிரம், நடிகர் சூரி ரூ.20 ஆயிரமும் நிதியுதவி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/RlsbKV
Tuesday 17 November 2020
Home »
» நடிகர் தவசிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்த விஜய் சேதுபதி