தமிழ்நாட்டின் நீலகிரி, கேரளாவின் வயநாடு, கர்நாடகாவின் பந்திப்பூர் இந்த முச்சந்திப்பு வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கும் அதிரடிப்படையினருக்கும் அவ்வப்போது மோதல்கள் ஏற்படுகின்றன.துப்பாக்கி
இந்தநிலையில், வயநாடு அருகில் உள்ள படிஞ்சாறை தாரா மீன்முட்டி வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக கேரளா தண்டர்போல்டு அதிரடிப் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இன்று காலை ஆயுதங்களுடன் வனத்துக்குள் இறங்கிய கேரள அதிரடிப்படையினர், தேடுதலில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கி இருந்த மவோயிஸ்ட்டுகளுக்கும் அதிரடிப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.கேரள காவல்துறை மற்றும் அதிரடிப்படை
இந்த துப்பாக்கிச் சூட்டில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக கேரள அதிரடிப்படை தெரிவித்துள்ளது. மேலும், குண்டடி காயத்துடன் மாவோயிஸ்ட் ஒருவர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தேனியைச் சேர்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.
Also Read: வயநாடு ரிசார்ட்டில் மாவோயிஸ்ட்டுகள் - அதிரடிப்படையினர் இடையே துப்பாக்கிச் சூடு -ஒருவர் சுட்டுக்கொலை!
இதனைத் தொடர்ந்து நீலகிரி - கேரள எல்லையோரத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன்,``கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் பனசுரா என்ற வனப்பகுதியில் கேரளா தண்டர்போல்ட் படையினரால் 35 வயது மதிக்கத்தக்க மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.கேரள காவல்துறை மற்றும் அதிரடிப்படை
மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சோலாடி, மணல்வயல் உட்பட எல்லைேயாரங்களில் உள்ள 11 சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நக்சல் தடுப்பு பிரிவினர் வனப்பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் யாரேனும் வருகிறார்களா என வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர கிராமப்பகுதிகளில் யாரேனும் புதிதாக காயத்துடன் நடமாடுவது தெரியவந்ததால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.
http://dlvr.it/Rkxllp
Wednesday 4 November 2020
Home »
» வயநாடு வனப்பகுதியில் அதிகாலை துப்பாக்கிச்சூடு... சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்!