இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த நாள் முதல் பெரும் பாதிப்புக்கு உள்ளான மாநிலங்களில் முக்கியமானது, யூனியன் பிரதேசமான தலைநகர் டெல்லிதான். அதேபோல இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிவித்ததும் டெல்லிதான். தற்போது, கொரோனா தொற்று பரவல் மூன்றாவது அலையின் உச்சத்தில் இருப்பதாக டெல்லி அரசு அறிவித்திருந்தது. மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கும் நிலையில், டெல்லியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பில்லை என்று டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.கொரோனா பரிசோதனை
பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்,``தற்போது கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் உச்சக்கட்டத்திலிருந்து குறைந்திருப்பதை என்னால் உங்களுக்குக் கூற முடியும். ஊரடங்கு என்பது ஒரு கற்றல் பயிற்சி.
Also Read: ஆந்திரா: பள்ளிகள் திறப்பு... 575 மாணவர்கள், 829 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
இந்த ஊரடங்குகளிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டது என்னவென்றால். ஊரடங்கில் கிடைக்கும் லாபங்கள் என்பது, நாம் முகக்கவசம் அணியும்போது கிடைக்கும் பலன் போன்றது. பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தற்போதைய நிலையில் முகக்கவசம் அணிவது மட்டுமே ஒரே தீர்வாக அமையும். முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருக்கிறார்.கொரோனா
டெல்லியில் நாளொன்றுக்கு 7,000-க்கும் அதிகமான புதிய தொற்று உறுதி செய்யப்பட்டுவந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 3,235 தொற்றுகள் மட்டுமே உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 7,000-க்கும் அதிகமானோர் வீடு திரும்பியிருக்கிறார்கள். கடந்த வாரத்தை ஒப்பிடும்போது தற்போது புதிய தொற்றின் எண்ணிக்கை பாதிக்குப் பாதியாகக் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/RlsbDx
Tuesday 17 November 2020
Home »
» கொரோனா மூன்றாவது அலையின் உச்சத்தைக் கடந்த டெல்லி!