சென்னையில் இரு தினங்களாக பெய்த கனமழை காரணமாக ஆதம்பாக்கம் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. 'நிவர்' புயலானது நேற்றிரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதிதீவிர புயலாக நகர்ந்து வந்த நிவர் தீவிரப் புயலாக வலுவிழந்து கரையை கடந்தது. இதற்கிடையே இரு தினங்களாக சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக வேளச்சேரி, ஆதம்பாக்கம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்ற குடியிருப்பு வாசிகளும், மாநகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
http://dlvr.it/RmS8X6
Thursday 26 November 2020
Home »
» சென்னை: வெள்ளநீரில் மிதக்கும் ஆதம்பாக்கம்! - கள நிலவரம்