கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் விஜய்மில்டன் இயக்குகிறார். தமிழில் ‘கோலிசோடா’ விக்ரமின் ’10 எண்றதுக்குள்ள’ படங்களை இயக்கியவர் இயக்குநர் விஜய் மில்டன். இவர் தற்போது கன்னடத்தில் ஒரு படத்தை இயக்குகிறார். கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கும் இந்தப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் தனஞ்செய் நடிக்கிறார். இந்தப்படத்தில் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ளார். கன்னட உலகில் முதன்முறையாக அறிமுகமாகும் விஜய் மில்டன் இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி இயக்குவதோடு ஒளிப்பதிவும் செய்கிறார். அனூப் சீலின் இசையமைக்கும் இப்படத்தின் பூஜை பெங்களூரில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற நவம்பர் 23 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சன்ஸ்க்ரிட் கல்லூரியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. Back to work for my new film.. pic.twitter.com/qNbqQd3bKI — DrShivaRajkumar (@NimmaShivanna) November 19, 2020 இது குறித்து நடிகர் சிவராஜ்குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “ புதியப்படத்திற்காக மீண்டும் வேலைக்கு புறப்படுகிறேன்” என்று பதிவிட்ட அவர் அதனுடன் விஜய்மில்டன் மற்றும் படக்குழுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அதில் இணைத்துள்ளார்.
http://dlvr.it/Rm7CsW
Saturday 21 November 2020
Home »
» நாயகியாக அஞ்சலி.. கன்னட சினிமாவில் கால்பதிக்கும் விஜய் மில்டன்!