கொரோனாவிலிருந்து மீண்டுவந்த நடிகை தமன்னா, சிகிச்சையின்போது தனக்குள் மரணபயம் குடிகொண்டிருந்ததாக கூறியுள்ளார். பிரபல தென்னிந்திய மற்றும் பாலிவுட் நடிகை தமன்னா பாட்டியாவுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பினார். அடுத்து தெலுங்கில் வெளிவரவுள்ள 11th Hour என்ற வெப் சீரீஸ் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், கொரோனா பாதிப்பின்போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், ‘’எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது நான் மிகவும் பயந்தேன். எனக்குள் மரணபயம் இருந்துகொண்டே இருந்தது. எனக்கு அறிகுறிகள் மிகவும் அதிகமாக இருந்ததால், சிகிச்சையின்போது மற்றவர்கள் உயிரிழந்ததை நினைத்து பயம் அதிகமாகிவிட்டது. ஆனால் மருத்துவர்கள் என்னை காப்பாற்றிவிட்டார்கள். மேலும் எனக்கு பக்கபலமாக இருந்த என் பெற்றோருக்கும் நன்றி சொல்லுகிறேன். வாழ்க்கை எவ்வளவு மகத்தானது என்பதை புரியவைத்துவிட்டது’’ என்று கூறியுள்ளார். மேலும், ‘’மருத்துவ சிகிச்சையின் போது அதிகப்படியான மருந்துகளை எடுத்துக்கொண்டதால் நான் குண்டானேன். அந்த புகைப்படத்தை நான் பகிர்ந்தேன். ஆனால் சமூக ஊடகங்களில் மக்கள் என்னை குண்டாகிவிட்டதாகக் கூறி விமர்சனம் செய்தார்கள். ஒருவர் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அதை புரிந்துகொள்ளாமல் குறைகளை மட்டுமே கண்டுபிடிக்கும் ஆட்கள்தான் அதிகம் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்’’ என்று பேசியுள்ளார்.
http://dlvr.it/RlRMHZ
Wednesday 11 November 2020
Home »
» ’’அதிகமான மருந்துகளை உட்கொண்டதால் குண்டானேன்’’ - விமர்சனங்களுக்கு பதிலளித்த நடிகை தமன்னா