அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்டீரியர் டிசைனரான அன்வை நாயக் என்பவர் 2018 ஆம் ஆண்டு தாயாருடன் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு கடந்த ஆண்டே முடிக்கப்பட்ட போதும், நாயக்கின் மகள் அளித்த புகாரின் பேரில் அர்னாப் கோஸ்வாமியை மும்பை காவல் துறை கைது செய்தது. ஒர்லி பகுதியில் உள்ள தமது வீட்டில் நுழைந்து தம்மையும் குடும்பத்தினரையும் காவல் துறையினர் தாக்கியதாகவும் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகவும் அர்னாப் கோஸ்வாமி குற்றம்சாட்டினார். இந்நிலையில், கைது நடவடிக்கையின்போது பெண் காவலர் ஒருவரை தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி, அவரது மனைவி, மகன் மற்றும் 2 பேர் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட அர்னாப் கோஸ்வாமி, அலிகாப் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு, 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இதுபற்றி செய்தியாளர்களுடன் பேசிய அர்னாப்பின் வழக்கறிஞர் கௌரவ் பார்க்கர், காவல் துறையுடன் அனுப்பாமல் நீதிமன்றக் காவல் அளித்ததே தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார். அர்னாப்பை ஜாமீனில் விடுவிக்கக் கோரும் மனுவை, நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
http://dlvr.it/Rl1jv6
Thursday 5 November 2020
Home »
» அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்