பாகுபலி திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ராணா டகுபதி. ஆஜான பாகுவான உடல் வாகில் அந்த படத்தில் மிரட்டியிருப்பார் அவர். இந்நிலையில், ரத்த கொதிப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பினால் தான் அவதிப்பட்டதாக சொல்லியுள்ளார் ராணா. நடிகை சமந்தா உடனான ‘சாம் ஜாம்’ சேட் ஷோவில் இதனை தெரிவித்துள்ளார் ராணா… “வாழ்க்கை வேகமாக போய்க் கொண்டிருக்க திடீரென ஒரு பேர் இடி . ரத்த கொதிப்பு, இதயத்தில் பாதிப்பு மற்றும் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டேன். கிட்டத்தை 70 சதவிகிதம் பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்பு இருந்தது. 30 சதவிகிதம் உயிரிழக்க கூட வாய்ப்பு இருந்தது. எனது உடல்நிலை குறித்து நிறைய வதந்திகள் பறந்தன. நான் நன்றாக தான் உள்ளேன். எனக்குள்ள கோளாறுகள் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. என் மீது நீங்கள் காட்டிய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி” என அவர் சொல்லியுள்ளார். இதற்கு முன்னதாக அவரிடம் உடல் நல கோளாறு கேட்ட போது அதை மறுத்து வந்தார் ராணா. ராணா டகுபதி மிஹீகா பஜாஜை ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி தனது நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/RmJBNH
Tuesday 24 November 2020
Home »
» “ரத்த கொதிப்பு, சிறுநீரக கோளாறால் கடுமையாக அவதிப்பட்டேன்” - பாகுபலி ராணா