உலகிலேயே கொடிய நோய் என்றால் அது எய்ட்ஸ்தான். இதுவரை, இந்நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. அப்படியொரு கொடிய நோயான எயிட்ஸ் இந்தியாவில் 1987 ஆண்டுகளின் காலக்கட்டத்தில் பரவத்தொடங்கியது. ஆனால், யாருக்கும் அது என்ன நோய் என்றும் தெரியாது. பின்புதான் கண்டுப்பிடிக்கப்பட்டது. அப்படியொரு கொடிய நோயான எயிட்ஸ் நோயை மையப்படுத்தி கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான மிருகம் படத்தின் இரண்டாம் பாகம் ‘மிருகம் 2’ படப்பிடிப்பு துவங்கவுள்ளது. சாமி இயக்கிய மிருகம் படத்தில் நடிகர் ஆதி அறிமுகமாகி இருந்தார். அவருக்கு ஜோடியாக பத்மப்பிரியா நடித்தார். தகாத உறவுகளால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஆதி அவதியுறும் காட்சிகள் விழிப்புணர்வூட்டின. அதோடு, அவரின் கெட்டப் விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இயக்குநர் சாமி இயக்கத்தில் மிருகம் 2 படத்தில் ஆர்.கே சுரேஷ் நடிக்கவிருக்கிறார். இதற்கான பூஜை போடப்பட்டுள்ள நிலையில், அதற்கான படத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தவர் “மிருகம் வெற்றிப்பெற்ற மிகச்சிறந்த படம். படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் பூஜை நடத்தினேன். இப்படத்தில் ஹீரோவாக நடிக்க பெருமைப்படுகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இயக்குநர் சாமி உயிர், சிந்து சமவெளி, கங்காரு உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளார். இவரது அனைத்துப் படங்களுமே சர்ச்சையை கிளப்பியுள்ளன. இந்நிலையில், மிருகம்2 படம் எந்த மாதிரியான சர்ச்சையை கிளப்பப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்!.
http://dlvr.it/Rm7Cmv
Saturday 21 November 2020
Home »
» ’மிருகம் 2’ படத்தில் நடிக்கும் ஆர்.கே சுரேஷ்!