சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றுள்ள சசிகலா கர்நாடகாவின் பெருங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத் தொகை பெங்களூரு நீதிமன்றத்தில் சமீபத்தில் கட்டப்பட்டது. சசிகலா
சசிகலா விடுதலை குறித்து கர்நாடக ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கேட்டிருந்த கேள்விக்கு, அவர் 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை பதில் கொடுத்திருந்தது. அதேபோல், ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்படுபவர்களுக்கு ஒருநாள்கூட விடுமுறையில்லை எனவும் கர்நாடக சிறைத்துறை, தனது பதிலில் கூறியிருந்தது.
Also Read: `சசிகலா விடுதலையில் சிக்கல்’ - அபராதத் தொகையைவைத்து அரசியல் ஆட்டம் ஆரம்பம்?
அபராதத் தொகை செலுத்தப்பட்ட நிலையில், நன்னடத்தை அடிப்படையில் சசிகலா சிறையில் இருந்து எந்நேரமும் விடுவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. இதுகுறித்த கேள்வியை கர்நாடக உள்துறை அமைச்சர் பசவாராஜ் பொம்மையிடம் செய்தியாளர்கள் எழுப்பினர். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த பசவராஜ், `சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா விடுதலையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்படாது’ என்று தெரிவித்தார். மேலும், சிறைச்சாலை விதிகளின்படியே அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார். கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை
சசிகலா விடுதலையாக 68 நாள்கள் இருக்கும் நிலையில், நன்னடத்தை அடிப்படையில் சிறைத்துறை அவருக்கு 129 நாள்கள் சலுகை வழங்க முடியும் என்று தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை விடுவிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கோரிக்கை வைத்திருந்தார்.
Also Read: சசிகலா 10 கோடி அபராத விவகாரம்: கடைசி நேர நீதிமன்றப் பரபரப்பு... நடந்தது என்ன?
http://dlvr.it/Rm41xJ
Friday 20 November 2020
Home »
» `சசிகலா விடுதலையில் சிறப்புச் சலுகை கிடையாது!’ - கர்நாடக உள்துறை அமைச்சர்