சென்னையில் இருந்து 630 கி.மீ தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிரப் புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 630 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் புதுச்சேரிக்கு அருகே 600 கி.மீ தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், வரும் 25 ஆம் தேதி பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே தீவிரப் புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
IMD bulletin 10 pic.twitter.com/98jr6LFnDw— TN SDMA (@tnsdma) November 23, 2020 மேலும், “சென்னையில் தொடங்கி டெல்டா மாவட்டங்கள் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளையும் நாளை மறுநாளும் மிக கனமழை வரை பெய்யக்கூடும். இன்று இரவு முதலே மழை தொடங்க வாய்ப்புள்ளது. நாளையும் நாளை மறுநாளும் கனமழை முதல் மிக கனமழை வரை எதிர்பார்க்கலாம். நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும். அதன்பிறகு தீவிரப் புயலாக மாறும். தீவிரப் புயலாகவே கரையை கடக்கும் பட்சத்தில், 89 முதல் 117 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
http://dlvr.it/RmDx18
Monday 23 November 2020
Home »
» 'நிவர்' தீவிரப் புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை