குழந்தைகள்போல் நீரில் சறுக்கி விளையாடும் நீர் நாய்களின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.  Otters enjoying water slide pic.twitter.com/F7Fk3Y0tzK — The Feel Good Page ❤️ (@akkitwts) November 2, 2020 மேலிருந்து கீழே வழுக்கிக்கொண்டே வந்து விழும் சறுக்கல் விளையாட்டு குழந்தைகளுக்கு மட்டுமல்ல. பெரியவர்களையும் குழந்தைகளாக்கும் விளையாட்டு. அதனாலேயே, பெரிய பெரிய தீம் பார்க்குகளில் நீரில் சறுக்கும் விளையாட்டுகள் உள்ளன. பூங்காக்களில் கூட குழந்தைகள் விளையாட சறுக்கும் விளையாட்டு சாதனங்கள் போட்டப்பட்டிருக்கும். கிராமங்களில்கூட மழைக்காலங்களில் பெரிய பெரிய மேடுகளிலிருந்து சிறுவர்கள் சறுக்கி விழுந்து விளையாடுவார்கள். எல்லா தரப்பினரையும் ஈர்த்த இந்த விளையாட்டு விலங்குகளை மட்டும் ஈர்க்காமல் போய்விடுமா என்ன?   The Feel Good Page  என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், நீர் வழியும் சறுக்கான வாய்க்காலில் வழுவழுப்புடன் இருக்கும் நான்கைந்து நீர்நாய்கள் வரிசையாக குதூகலத்துடன் சறுக்கிக்கொண்டு வந்து விழுகின்றன. அதேபோல், கீழே நீரில் விழுந்ததும் மீண்டும் சறுக்கி விழ மேலே ஆசையுடன் செல்கின்றன. இந்த வீடியோவைப் பார்க்கும் நம்மையும் சறுக்கிச் சென்று குதூகலிக்க மனம் குத்தாட்டம் போடுகிறது.
http://dlvr.it/RksvYf
Tuesday, 3 November 2020
Home »
 » குழந்தைகள் போல் சறுக்கி விளையாடும் நீர் நாய்கள்: வைரல் வீடியோ






 
 

 
 
 Posts
Posts
 
 
